லாட்டரியில் 62 கோடி.. தலைகீழாக மாறிய வாழ்க்கை! கடல் கடந்து போனவருக்கு வீடு தேடி வந்த அதிர்ஷ்டம்

  • துபாய்: துபாயில் கணவருடன் வசித்து வந்த இந்திய பெண்ணுக்கு லாட்டரியில் ரூ.62 கோடி பரிசு விழுந்துள்ளது. நினைத்து கூட பார்க்காத அளவிற்கு ஒரே நாளில் பணம் லாட்டரியில் கொட்டியதால் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போயுள்ளார். 4 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்தவருக்கு இந்த முறை எதிபாராத வகையில் பெரிய பரிசுத்தொகை அடித்துள்ளது.

    Advertisement

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவை சேர்ந்த ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். டிரைவர், எலக்ட்ரிஷியன், ஐடி என பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் அங்கேயே தங்கியிருந்தும் பணி செய்து வருவதை பார்க்க முடியும்.

    Advertisement

    லாட்டரியில் 62 கோடி ரூபாய் பரிசு

    ஐக்கிய அரபு அமீரத்தை பொறுத்தவரை அங்கு லாட்டரிகளுக்கு அனுமதி உள்ளது. இப்படி வேலைக்காக சென்ற இந்தியர்கள் கூட அங்கு லாட்டரிகளை வாங்கி வருகிறார்கள். சில நேரங்களில் அதிர்ஷ்டம் கோடி கோடியாக கொட்டி விடுகிறது. அப்படியாகத்தான் துபாயில் தனது கணவருடன் வசித்து வந்த இந்திய பெண் மீனா சரீனுக்கு லாட்டரியில் 62 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது.

    கடல் கடந்து வேலைக்காக சென்ற நிலையில், வீடு தேடி அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம். பஞ்சாபை சேர்ந்தவர் மீனா சரீன். தனது கணவர் துபாயில் வேலை செய்து வருவதால் மீனா சரீனும், அவருடன் துபாயில் தங்கியுள்ளார். இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. என்றாவது ஒருநாள் நமக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதா? என்ற ஏக்கத்துடன் லாட்டரியை வாங்கி வந்துள்ளார் மீனா சாரின்.

    Advertisement
    Kerala Lottery: கேரளாவில் போலி லாட்டரியா? கொல்லத்தில் ஒரே எண்ணில் 2 லாட்டரி டிக்கெட்டுகள்! சேட்டன்கள் அதிர்ச்சி!

    4 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்த அவருக்கு இதுவரை பரிசுகள் பெரிதாக அடிக்கவில்லை. இருந்தாலும் எப்படியும் அதிர்ஷ்டம் வீடு தேடி வந்து கதவை தட்டும் என்ற எதிர்பார்ப்புடன் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார் மீனா சரீன். இந்நிலையில் அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. அண்மையில் வாங்கிய லாட்டரி டிக்கெட் எண் 304251 எண்ணிற்கு 25 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 62 கோடி) பரிசு விழுந்துள்ளது.

    குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி செய்வேன்

    லாட்டரி குழுவிடம் இருந்து மீனா ஷரீனுக்கு போன் வந்த போது, துபாயில் உள்ள ஒரு மாலில் இருந்துள்ளார். திடீரென போன் காலில் 62 கோடி பரிசு விழுந்துள்ளது என்று சொன்னதும் ஒரு நிமிடம் திக்கு முக்காடி போயுள்ளார். மகிழ்ச்சியில் அவரது உடல் எல்லாம் நடுங்கியுள்ளது. சில வினாடிகள் கழித்தே இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

    Advertisement
    காபி குடிக்கும்போதே வந்த ₹9.5 கோடி ஜாக்பாட்! துபாய் லாட்டரியில் லெபனான் தொழிலதிபருக்கு அதிர்ஷ்டம்

    பரிசுத்தொகையை என்ன செய்வது என இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். பரிசுத்தொகையில் கணிசமான பகுதி அறப்பணிகளுக்கும், உதவி தேவைப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். அவர் இந்த பரிசுத்தொகையை மூன்று பேருடன் பகிர வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

    English Summary

    Lucky Indian: An Indian woman living in Dubai with her husband has won a lottery prize of Rs 62 crore. She is overwhelmed with joy, having suddenly come into such a massive, unexpected windfall. Having participated in the lottery for the past four years, she has now hit the jackpot in a completely unforeseen way.