Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

  • சென்னை: இசைஞானி இளையராஜாவின் 83 ஆவது பிறந்தநாளையொட்டி ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

    Advertisement

    தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். 'இசைஞானி' என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.

    அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அது போல் கமல்ஹாசனும் வாழ்த்தியுள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.

    உங்கள்
    கமல்

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி என இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இளையராஜாவுக்கு ஜூன் 3ஆம் தேதி பிறந்தநாள். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளும் அதே நாளில் என்பதால் அவர் மீதான மரியாதைக்காக தனது பிறந்தநாளை முன்கூட்டியே ஜூன் 2ஆம் தேதியே கொண்டாடுகிறார்.

    அந்த வகையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவில் ஆண்டுதோறும் ரசிகர்கள் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை நேரடியாக தெரிவித்து வருகிறார்கள். அது போல் இளையராஜாவுக்கு போன் மூலமும் சோசியல் மீடியாவிலும் வாழ்த்துகள் குவிகின்றன.

    அந்த வகையில் இன்று காலை முதலே இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பூங்கொத்து, பொன்னாடை, இனிப்பு உள்ளிட்டவைகளுடன் காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவராக இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

    English Summary

    On the occasion of music maestro Ilaiyaraaja’s 83rd birthday, former Tamil Nadu Chief Minister M. K. Stalin extended his greetings, wishing that “Raja’s reign continues.” The message celebrates Ilaiyaraaja’s enduring legacy and immense contribution to Indian music.