மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை.. கொளத்தூர் தேர்தல் முடிவுகள் மாறுமா? கடந்த காலங்களில் நடந்தது இதுதான்!

  • சென்னை: கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு முன்னர் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் இதுபோன்ற கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். இதன்படி செய்யப்பட்ட சோதனைகள் என்ன ஆனது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், 2026 தேர்தலில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    இதற்கு முன்னர் நடந்தது என்ன?

    தேர்தல் முடிவுகளில் 2 மற்றும் 3வது இடத்தை பிடித்தவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோகண்ட்ரோலர் மெமரியை சரிபார்க்க கோரி விண்ணப்பிக்கலாம். கடந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானபோது, வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டிருந்த ஏ.சி.சண்முகம் தோல்வியடைந்திருந்தார். அவர் இதே போல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

    சோதனையில் என்ன நடக்கும்?

    இப்படி கோரிக்கைகள் வைக்கப்படும்போது, இயந்திரங்களை எப்படி சரிபார்க்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதாவது, இந்த இயந்திரங்களை உற்பத்தி செய்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் மின்கலன் கழகத்தின் (ECIL) பொறியாளர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்வார்கள்.

    Advertisement

    மாவட்ட தேர்தல் அதிகாரியின் முன்னிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும். இதற்கான கோரிக்கை விடுத்த வேட்பாளர், அதாவது மு.க.ஸ்டாலின் அல்லது அவரது பிரதிநிதி இந்த சோதனையை நேரில் பார்க்க அனுமதிக்கப்படுவார். சோதனை முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும்.

    மாதிரி வாக்குப்பதிவு

    அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபாட் ஆகியவை தங்களுக்குள் சரியாக தொடர்புகொள்கிறதா என்பதை சோதனை செய்து காட்டுவார்கள். இந்த சோதனையின்போது.. ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் சுமார் 1400 வாக்குகள் செலுத்தப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். இது முடிந்ததும்.. கன்ட்ரோல் யூனிட்டில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், விவிபாட் இயந்திரத்தில் விழுந்த வாக்கு சீட்டுகளின் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா? என்பதை அதிகாரிகள் செக் செய்வார்கள்.

    Advertisement

    எப்படி நிரூபிக்கப்படும்?

    இது சரியாக இருக்கிறது எனில் இயந்திரத்தின் மைக்ரோகண்ட்ரோலர் சரியாக இருக்கிறது என்பது நிரூபணம் ஆகும். இந்த சோதனையின் போது.. தேர்தல் சமயத்தில் ஏற்கெனவே பதிவான டேட்டா டெலிட் செய்யப்படவோ.. மாற்றி அமைக்கப்படவோ மாட்டாது.

    ஒரு செட் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி பார்க்க ரூ.47000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். சோதனை செய்ய கேட்பவர்தான் இந்த கட்டணத்தை கொடுக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் தரப்பு 14 இயந்திரங்களை சரிபார்க்க கோரியிருக்கிறது. இந்த சோதனையில் மோசடி ஏதும் இல்லை என்று நிரூபணமானால் கட்டணம் திருப்பி கொடுக்க மாட்டார்கள்.

    Advertisement

    ஏ.சி.சண்முகம் கோரிக்கை என்ன ஆனது?

    முன்னதாக பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மட்டுமல்லாது.. நாடு முழுவதும் 11 வேட்பாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அதன்படி சோதனையும் நடைபெற்றது. ஆனால், சோதனையில் எந்த ஒரு முறைகேடு நடந்திருப்பதாகவும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    M.K. Stalin’s Request:Former Chief Minister M.K. Stalin has requested an inspection of the Electronic Voting Machines (EVMs) used in the Kolathur constituency. Candidates in various other constituencies have made similar requests in the past. Let us examine in detail what became of the inspections conducted in response to those requests.