தவெக ஆட்சிக்கு பின்னால் சோஃபாவோ, கல்லாப் பெட்டியோ இல்லை.. மு வீரபாண்டியன்

  • சென்னை: தவெக ஆட்சிக்கு பின்னால் சோஃபாவோ, கல்லாப் பெட்டியோ இல்லை என்றும், விடுதலைக்காக போராடியவர்களுக்கு கல்லாப் பெட்டியும் வராது.. ஷோஃபாவும் வராது.. வந்ததாக வரலாறும் இல்லை.. என மு வீரபாண்டியன் கூறினார். தேர்தலில் தவெகவை மக்கள் மும்மொழிந்தார்கள், நாங்கள் வழிமொழிந்தோம்.. நாங்கள் எடுத்த முடிவு சரியானது தான்.. ஜனநாயகத்தின் இருபக்கங்கள் வெற்றி, தோல்வியை கொண்டது என தெரிவித்தார்.

    Advertisement

    சென்னை காமராஜ் அரங்கில் விசிக விருது வழங்கும் விழா நடந்தது. இதில் தொல் திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு, வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய வீரபாண்டியன், தவெக ஆட்சிக்கு பின்னால் சோஃபாவோ, கல்லாப் பெட்டியோ இல்லை என்றும் தவெக ஆட்சி ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்தும் விளக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    நாங்க ஆதரவு அளிக்கவில்லை என்றால்

    ஜனநாயகத்தை மதித்து சில முடிவுகளை எடுத்தோம். யாரும் எதிர்பாராத சூழலில் தவெக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க அவர்கள் இடதுசாரி கட்சிகளை அணுகினர். சிபிஐ, சிபிஎம், விசிகவை அணுகினர். திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. தவெக தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதரவு தாருங்கள் என நம்மிடம் கேட்டுவிட்டார்கள்.

    நாம் ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஒரு ஜனநாயக சக்திக்கான வாய்ப்பை மறுத்துவிட்டார்கள் என்ற வரலாற்று பழி, அல்லது அந்த சூழலை பயன்படுத்தி ஆளுநர் ஆட்சி அமைந்துவிட்டால், மக்கள் அதிகாரத்தின் மீது ஆட்சியாளர்கள் ஆளுநர் போன்ற நபர்கள் அமர வாய்ப்பளித்துவிட்டார்கள் என்ற தீராத வரலாற்று பழி.. எனவே மிக ஆழமாக அமைப்பாக நாங்கள் எடுத்த முடிவே தவிர, யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை.

    Advertisement

    விடுதலைக்காக போராடியவர்களுக்கு

    மக்கள் முன்மொழிந்துள்ளார்கள். நாங்கள் வழிமொழிந்துள்ளோம். இதற்கு எதாவது நிபந்தனை இருக்கிறதா?.. நீங்கள் சொல்வது போன்று ஷோஃபா, கல்லாப்பெட்டி.. ஒரு போதும் விடுதலைக்காக போராடியவர்களுக்கு கல்லாப் பெட்டியும் வராது.. ஷோஃபாவும் வராது.. வந்ததாக வரலாறும் இல்லை.. நண்பர்களே, தோழர்களே முழுக்க முழுக்க அரசியலாக முடிவு எடுத்தோம். திமுகவும், அதிமுகவும் இணைந்தால் என்ன பிரச்சினை என்றார்கள்.

    அது ஜனநாயக இயக்கங்கள்.. அது எப்போது வேண்டுமானாலும் இணையலாம். ஆனால் இது கேள்வி இல்லை. ஆளுநர் காய் நகர்த்தியது தான் கேள்வி.. கால தாமதம் செய்து அவர் வந்து ஆட்சியில் இருந்துவிடக் கூடாது. இந்த ஒரு நோக்கம் தான். நாங்கள் எடுத்த முடிவு சரியானது தான்.. ஜனநாயகத்தின் இருபக்கங்கள் வெற்றி, தோல்வியை கொண்டது.. என்று கூறினார்.

    English Summary

    M Veerapandian said TVK's rise was based on people's support, not money. He defended backing the party, saying democracy always has winners and losers.