எனது மகன் ராகா”.. பொறுப்புள்ள அப்பாவாக இருப்பேன் என அறிவித்த மாதம்பட்டி ரங்கராஜ்!

  • சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகன் ராகாவை தனது மகன் என ஏற்று, வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார். என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்குத் துணை நிற்பேன் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார்.

    Advertisement

    பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அவருக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடர்ந்தார். 2023 ஆம் ஆண்டு தங்களுக்குத் திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார். தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார்.

    Advertisement

    விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், டி.என்.ஏ பரிசோதனையில் தந்தை என்று தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க மாதம்பட்டி ரங்கராஜ் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, டி.என்.ஏ பரிசோதனையில் மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தை என்பது உறுதியானது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

    இந்நிலையில் மகனை ஏற்றுக்கொண்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். "இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன்" என்று குறிப்பிட்டு மகன் ராகா உடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.

    Advertisement

    மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றூம் எதிர்காலத்திற்காக முமுப் பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    மகன் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள பதிவில், "உண்மை தனக்கான இடத்தை தானே அடையும். சில போராட்டங்கள் வெற்றிக்காக அல்ல, ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்காக... இன்று, ஒரு தாயின் மனம் அமைதியடைந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Madhampatti Rangaraj has announced that he accepts Raga—the son of joy crizildaa—as his own son and pledges to take responsibility for him for the rest of his life. He stated that he would stand by Raga Rangaraj, supporting his well-being, happiness, and future throughout his lifetime.