சென்னை: நாகர்கோவில் அருகே யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் இப்போது வேறு ஒரு கோணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது? மதுமிதாவின் முந்தைய பின்னணி என்ன? இந்த வழக்கில் அவரைச் சுற்றி ஏன் போலீஸாரின் சந்தேகம் திரும்பியிருக்கிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே தம்மத்துகோணம் பகுதியில் உள்ள வி.ஐ.பி கார்டனில் வசித்து வருகிறார் யூடியூபர் மதுமிதா. ஏலக்காய் வியாபாரம் செய்து வரும் கணவர் வினோத்குமாருடன் வசித்து வரும் அவர், வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை அடிக்கடி வீடியோவாகவும் ரீல்ஸாகவும் வெளியிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
2020-ம் ஆண்டு முதல் யூடியூப்பில் இயங்கி வரும் மதுமிதாவுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.. முழுக்க, முழுக்க பணம், நகைகளை வைத்தே ரீல்ஸ் போட்டு பிரபலமானவரும்கூட. இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி நள்ளிரவு வீட்டின் பின்பக்கக் கதவு கட்டர் மூலம் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்ததாக புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த 118 சவரன் தங்க நகைகள், பணம் உள்ளிட்டவை கொள்ளை போனதாக தகவல் வெளியானது. இதையடுத்து ராஜாக்கமங்கலம் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர். இறுதியில் முக்கிய குற்றவாளியான இசக்கி பாண்டியன் உடப்ட 4 பேரை கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து 98 சவரன் நகைகளையும் மீட்டுள்ளது.. ஆனால் விவகாரம் இத்துடன் முடியவில்லை.. மதுமிதா வெளியிட்டிருந்த நகை, பணம் தொடர்பான வீடியோக்களை பார்த்துதான் கொள்ளையர்கள் திட்டம் போட்டார்களா என்ற கோணமும் விசாரணையில் வந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸார் கேள்வி எழுப்பியபோது, மதுமிதா அந்தப் பேச்சை விரும்பாமல் விசாரணையை பாதியில் நிறுத்திவிட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டதாக சொல்லப்படுகிறது. மீடியாக்களிடமும் அவர் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அதேசமயம், கொள்ளை நடந்த சில நாட்களிலேயே குழந்தையை பணத்தில் குளிப்பாட்டுவது போன்ற வழக்கமான ரீல்ஸ்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்தான், மதுமிதாவின் முந்தைய பின்னணி குறித்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கடந்த ஜனவரி மாதம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு ஸ்பாவில் இருந்த போது, சட்டத்தை மீறி நடந்துகொண்டதாக வடசேரி காவல் நிலையத்தில் ஐ.டி.பி ஆக்ட் பிரிவின்கீழ் வழக்கு ஒன்று உள்ளதாம்.. அதனால், அவரை மையமாக வைத்து, அவரது நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடக்கிறதாம். இதனால் மதுமிதாவின் பின்னணி மட்டுமல்லாமல், அவருடைய நெருங்கிய வட்டாரத்தையும் போலீஸார் விசாரித்து வருகிறார்களாம். அதேபோல, வீட்டில் கொள்ளை நடந்த விஷயம் தெரியவந்ததும் வருமானவரித்துறையினரும் 2 நாட்களுக்கு முன்பு மதுமிதாவிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொள்ளை போன நகை 118 சவரன் என்கிறாராம் மதுமிதா. கொள்ளையனோ, வெறும் சவரன் மட்டுமே கொள்ளையடித்ததாக வாக்குமூலம் தந்துள்ளாராம்.. எனவே உண்மையிலேயே எவ்வளவு நகை மதுமிதா வைத்திருந்தார் என்ற விசாரணையும் நடக்கிறதாம்.. முக்கியமாக 118 சவரன் கொள்ளை வழக்கில், வெறும் வெளியில் இருந்து வந்த கொள்ளையர்களின் கைவரிசையா அல்லது வேறு ஏதாவது பின்னணி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கொள்ளை குறித்து 2, 3 கோணங்களில் விசாரணை நடந்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் துப்பு துலங்கும் என்றும் கன்னியாகுமரி டி.எஸ்.பி பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உண்மையில் எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்பதும், இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும் போலீஸ் விசாரணை முடிவில்தான் தெரியவரும்... மொத்தத்தில் கொள்ளையன் கைது செய்யப்பட்டும்கூட, கொள்ளை நகை பறிமுதல் செய்யப்பட்டும்கூட, மதுமிதா விவகாரம் புகைந்தபடியே உள்ளது...!!கன்னியாகுமரி ரீல்ஸ் அழகி
மதுமிதா வீட்டு கொள்ளை
நாகர்கோவில் வடசேரி ஸ்பா
உண்மையிலேயே எவ்வளவு நகை