மதுமிதா கைதாகிறாரா? நெல்லை தொழிலதிபர் 5 பவுன் தங்கம் கேஸில் நடந்தது என்ன? விசாரணை ஆரம்பம்

  • சென்னை: யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது மதுமிதா மீதே 5 பவுன் தங்க சங்கிலியைத் திருடியதாகப் புகார் வந்தது.. இதையடுத்து இந்த வழக்கு ஏற்கனவே நெல்லைக்கு மாற்றப்பட்டுவிட்டது. இருந்தும் அங்கு புதிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படியானால், இந்த வழக்கில் உண்மையில் என்னதான் நடக்கிறது?

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் அனந்தநாடார்குடி பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா.. 28 வயதான இவரது கணவர் ஒரு ஏலக்காய் வியாபாரி.

    Advertisement

    ஏலக்காய் வியாபாரி மனைவி மதுமிதா

    கடந்த சில வருடங்களாகவே, விதவிதமான தங்க நகைகள், கட்டுக்கட்டாகப் பணம் ஆகியவற்றுடன் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார் மதுமிதா.. இதைப் பார்த்த கொள்ளையர்கள், மதுமிதா வீட்டில் ஏராளமான நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டு, கடந்த மாதம் அவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து உள்ளே புகுந்து 118 பவுன் தங்க நகைகளையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடி சென்றுவிட்டார்கள்..

    இதுகுறித்து மதுமிதா கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, நகை திருடிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 98 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர்.

    Advertisement

    திருநெல்வேலி 5 பவுன் தங்கம்

    இந்தச் சூழலில்தான் நெல்லையைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து, மதுமிதா மீது புகார் அளித்தார்... கடந்த 2022-ம் ஆண்டு நெல்லை கே.டி.சி. நகரில் பிசியோதெரபி சிகிச்சை பெற்றபோது மதுமிதா அறிமுகமானதாகவும், மசாஜ் செய்வதாக சொல்லி, தனது காரில் ஏறியதாகவும், பிறகு மதுமிதாவைப் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற பிறகுதான், தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை என்றும் புகாரில் கூறியிருந்தார்.

    இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் மதுமிதா மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், சம்பவம் நடந்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் நெல்லை என்பதால், வழக்கு பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    Advertisement

    பொதுவாக, ஒரு இடத்தில் நடந்ததாக சொல்லப்படும் குற்றம் தொடர்பாக வேறொரு மாவட்டத்தில் புகார் அளிக்கப்பட்டால், அங்கு ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, சம்பவம் நடந்த மாவட்டத்துக்கு வழக்கை மாற்ற முடியும்... அதன் பிறகு அந்த மாவட்ட போலீசார் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

    மதுமிதா மீதான புகாரிலும் இதுதான் நடந்துள்ளது... ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, வழக்கு நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    தாலுகா போலீஸ் விளக்கம்

    ஆனால், வழக்கு மாற்றப்பட்டு 2 நாட்கள் ஆகியும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புதிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியானது.. இன்னும் அந்த வழக்கு ஜீரோ எஃப்.ஐ.ஆர். நிலையிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது..

    Advertisement

    இதுகுறித்து தாலுகா போலீசார் சொல்லும்போது, "முதலில் புகார் கொடுத்த பேச்சிமுத்துவிடம் விசாரணை நடத்த வேண்டும்.. அவரிடம் விசாரித்த பிறகுதான் வழக்குப்பதிவு செய்ய முடியும், வழக்குப்பதிவு செய்த பிறகு விசாரணை தீவிரப்படுத்தப்படும்" என்று தெளிவுபடுத்தியிருந்தனர்.

    விசாரணை ஆரம்பம்

    இந்நிலையில், மதுமிதா மீதான புகார் தொடர்பாக விசாரணை ஆரம்பமாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்சூ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் பா. சாஸ்திரி செய்தியாளர்களிடம் பேசும்போது, வழக்கு பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.. இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதுமிதா கண்டிப்பாகக் கைது செய்யப்படுவார்" என்று உறுதி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கைதாகிறாரா மதுமிதா

    ஒருபுறம் விசாரணை தொடங்கிவிட்டதாக எஸ்.பி. சொல்கிறார். மறுபுறம், புகார்தாரரிடம் விசாரித்த பிறகே புதிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என்றும், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படியானால், பேச்சிமுத்துவிடம் விசாரணை எப்போது முடியும்? புதிய எஃப்.ஐ.ஆர். எப்போது பதிவு செய்யப்படும்? 2022-ல் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது? என்றெல்லாம் போலீஸ் விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்.

    ஆகமொத்தம், தனது வீட்டில் நடந்த நகைக் கொள்ளையால் பேசப்பட்ட மதுமிதா, இப்போது இந்தப் புகாராலும் கவனத்தை ஈர்த்துள்ளார்... ஒருவேளை குற்றம் நிரூபணமானால் மதுமிதா கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதும், சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது..!!!

    English Summary

    Madhumitha Jewelry Theft.. Will Cardamom Trader’s Wife Be Arrested in Tirunelveli?