காருக்குள் மசாஜ்.. தொழிலதிபர் கழுத்தில் 5 பவுன் செயினை எடுத்த மதுமிதா? போலீசுக்கு ஓடிய முதியவர்

  • சென்னை: யூடியூபர் மதுமிதா,. சோஷியல் மீடியாவில் பணம், நகைகள் என ஆடம்பர வாழ்க்கையை காட்டி பிரபலமானவர்.. இவரை சுற்றி ஏற்கனவே ஸ்பா, பாலியல் புகார் உள்ளிட்ட பல சர்ச்சைகள் பேசப்பட்ட நிலையில், இப்போது இன்னொரு விஷயம் கிளம்பியுள்ளது... ஒரு காலத்தில் நடந்த சம்பவம் இப்போது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருப்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்..

    Advertisement

    சோஷியல் மீடியாவில் கட்டுக்கட்டாகப் பணத்தையும், கிலோ கணக்கில் நகைகளையும் காட்டி ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானவர் மதுமிதா.. இவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்..

    Advertisement

    நாகர்கோவில் மதுமிதா

    இன்ஸ்டாகிராம் பிரபலமான இவரது வீடு நாகர்கோவிலில் உள்ளது.. இந்த வீட்டில் நடந்த நகைக்கொள்ளை சம்பவம் கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இந்தத் திருட்டு வழக்கில் கொள்ளையர்கள் பிடிபட்ட போதிலும், புகாரில் குறிப்பிடப்பட்ட 118 அல்லது 119 பவுன் நகைகளுக்கும், கொள்ளையன் சிக்கிய 98 பவுன் நகைகளுக்கும் உள்ள வித்தியாசத்தால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    அதேபோல, ஏற்கனவே நாகர்கோவில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்ததாக கூறப்படும் ஒரு ஸ்பாவில் மதுமிதா பிடிபட்டதாகவும், அப்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது..

    Advertisement
    ஸ்பா.. வருமான வரி.. ரீல்ஸ் அழகி மதுமிதா.. 98 சவரன் கிடைச்சாச்சு, ஆனால் 118 இடிக்குதே? 3 டவுட்

    ஸ்பா, பாலியல் புகார்

    காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த இவரை, பிறகு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து தான் மீட்டுள்ளனர். அதாவது பெண்கள் காப்பகத்தில் நன்னடத்தைக்காக அடைக்கப்பட்டு, பிறகு கோர்ட் மூலமாக நிபந்தையுடன் வெளியே விடப்பட்டாராம் மதுமிதா. அதுமட்டுமல்ல, மதுமிதா தனது சொந்த ஊர் கோவை என்று பலரிடமும் சொல்லி வந்தாலும், அவர் உண்மையில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவலும் வெளியானது..

    15 வருடங்களுக்கு முன்பு தனது அப்பாவின் சகோதரர் மகன் அதாவது பெரியப்பா மகன் ராஜேஷ் என்பவரை காதலித்ததாகவும், அண்ணன் உறவுமுறை என்று தெரிந்தும் அவரை காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் பல்லடத்தில் சென்று குடும்பம் நடத்தி வந்ததாகவும், பிறகு அவரை பிரிந்து பல திருமணங்கள் செய்த நிலையில் தற்சமயம் தென்காசியை சேர்ந்த நபரை திருமணம் செய்துள்ளதாகவும் தகவல்கள் இணையதளத்தில் பரவி பெரும் பரபரப்பை தந்திருந்தன. .

    Advertisement

    நகை திருட்டு வழக்கு

    இப்போது, மதுமிதா மீது இன்னொரு நகை திருட்டு புகார் வந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதுதான் இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாகி இருக்கிறது.

    இந்த முறை புகார் கொடுத்திருப்பவர் நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து என்பவராவார்.. இவருக்கு மதுமிதாவை ஏற்கனவே தெரியுமாம்.. பிசியோதெரபி சிகிச்சையின்போதுதான் பேச்சிமுத்துவுக்கு மதுமிதா அறிமுகமானதாக கூறப்படுகிறது.

    30 லட்சம் கடனை அடைக்க திண்டாடிய போது யூடியூபர் மதுமிதா வீடியோ பார்த்தேன்.. கைதான நபர் வாக்குமூலம்

    பேச்சிமுத்து தந்த புகார்

    பேச்சிமுத்து என்பவர் ராஜமங்கலம் போலீஸில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. "கடந்த 2022-ம் ஆண்டு, பிசியோதெரபிஸ்ட் என்ற பெயரில் ஸ்பாக்களில் மதுமிதா வேலை செய்தபோது காரில் எனக்கு மசாஜ் செய்வதற்காக வந்தார். நெல்லை நீதிமன்றம் அருகே என்னுடைய வாகனத்தில் மதுமிதா ஏறினார்.. அதன்பிறகு மதுமிதாவை பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டு என்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

    Advertisement

    வீட்டுக்குச் சென்ற பிறகுதான் என்னுடைய கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நகையை திருடியதோடு இதுபற்றி வெளியே சொன்னால் அசிங்கப்படுத்துவேன் என மதுமிதா மிரட்டினார்" என்று அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்..

    சம்பவம் நெல்லையில் நடந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளதால், இந்த வழக்கை மேல் நடவடிக்கைக்காக நெல்லை மாவட்டத்துக்கு மாற்றும் பணியும் நடந்து வருகிறது. அதாவது, 118 பவுன் நகை கொள்ளை வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், இப்போது 2022-ம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் 5 பவுன் செயின் மாயமான விவகாரமும் மதுமிதாவை சுற்றியே வந்துள்ளது.

    English Summary

    Did YouTuber Madhumitha Take 5 Sovereigns of Jewelry? Spa, Sexual Complaint.. Now a New Twist?