ஆண் நண்பருடன் நைட் வீடியோ கால்! குழந்தையை வளர்க்க அம்மாவுக்கு உரிமை உள்ளதா? நீதிமன்றம் உத்தரவு

  • சென்னை: ஆண் நண்பர்களுடன் இரவு வீடியோ கால் பேசிக்கொண்டும், அந்த மாதிரியான போட்டோக்களை ஷேர் செய்துக்கொண்டும் இருந்த மனைவியிடம் தனது குழந்தைகள் வளர விரும்பவில்லை என்று கணவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இது தொடர்பான வழக்கில் குழந்தை யாரிடம் வளர வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

    Advertisement

    ஊட்டியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் அளித்த புகாரின்படி கடந்த 2023ம் ஆண்டு அவரது மனைவி அவரது ஆண் நண்பருக்கு காதலை வெளிப்படுத்தி மெசேஜ் அனுப்பியதையும், அவருக்கு தனது தனிப்பட்ட போட்டோக்களையும் அனுப்பியதையும் கண்டுபிடித்ததாக தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    வீட்டை விட்டு அனுப்பிய கணவர்

    தனது மனைவி, நைட் நேரங்களில் மற்ற ஆண்களுடன் வீடியோ கால் பேசி வந்ததாகவும், அதற்காக குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் ஃபுட் வாங்கி கொடுத்து சீக்கிரமாக தூங்க வைத்துவிடுவார் என்றும் கணவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்ததும் கணவர் மனைவியை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அன்று முதல் குழந்தைகளை தந்தையாக இவரே வளர்த்திருக்கிறார்.

    குழந்தை வளர்ப்பில் உரிமை

    இப்படி இருக்கையில், குழந்தைகளை தன்னுடன் அனுப்ப கோரி அந்த பெண் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இதற்கு முன்னர் ஊட்டி குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் இதேபோல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

    Advertisement

    இதனையடுத்து தற்போது வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. நீதிபதி பி.டி.ஆஷா மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தீர விசாரித்தது, குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது. விசாரணையின்போது நீதிமன்றம் முன்வைத்த முக்கிய கருத்துக்கள் மிகுந்த கவனம் பெற்றிருக்கின்றன.

    எது ஒழுக்கம்?

    தாய் தனது நடத்தையை நீதிமன்ற விசாரணையின்போது ஒப்புக்கொண்டிருக்கிறர். இத்தகைய சூழலில் குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்தால், எது ஒழுக்கம்? எது நெறிமுறை என்ற வேறுபாடு தெரியாமல் அவர்கள் வளர நேரிடும் என நீதிபதிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

    புகழ்பெற்ற சூஃபி கவிஞர் ரூமி மற்றும் கலீல் ஜிப்ரான் ஆகியோரின் கவிதைகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், "ஒரு தாயின் அன்பு என்பது மிகவும் தூய்மையானதாகவும், கடவுகளை விட உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியதாகவும் இருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அந்த பெண் ஒரு தாய்க்கான கடமையையும் தகுதியையும் மறந்திருக்கிறார்" என்று சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

    Advertisement

    கடவுளை விட

    நமது கலாச்சாரத்தில், "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று தாய்க்கு கடவுடளை விட உயர்ந்த இடம் வழங்கப்பட்டிருக்கிறது. தாயூட்டும் போதே குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தர வேண்டிய தாயே இவ்வாறு நடந்துக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களின்படி, ஒரு பெற்றோர் தகுதியற்றவரா என்று பார்ப்பதை விட, குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல்நலம், கல்வி மற்றும் ஒழுக்க நெறிமுறை சார்ந்த நல்வாழ்வுக்கு யாருடைய பாதுகாப்பு உகந்தது என்ற 'நேர்மறை சோதனையின்' அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருக்கிறது.

    அதாவது 7 மற்றும் 9 வயதுடைய அந்த 2 குழந்தைகளும் தற்போதைய நிலையில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வயதில் இருப்பதால் தாயின் நடத்தை அவர்களது நல்வாழ்வை பாதிக்கும் என்று கூறி, தாயின் பராமரிப்பில் குழந்தையை வளர்க்க அனுமதி மறுத்துவிட்டது.

    Advertisement

    நேர்மறை சோதனை என்றால் என்ன?

    விவாகரத்து மற்றும் குழந்தை பராமரிப்பு வழக்குகளில் 'நேர்மறை சோதனை' மூலம் நீதிமன்றம் சில நேரங்களில் முடிவு எடுக்க வேண்டி வரும். குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வை முதன்மையாக கொண்டு எடுக்கப்படும் ஒரு மிக முக்கியமான சட்டப்பூர்வ அணுகுமுறை இது.

    சாதாரண வழக்குகளில் யார் தவறு செய்தார்கள் என்றுதான் நீதிமன்றம் பார்க்கும். ஆனால், குழந்தை வளர்ப்பு, பாதுகாப்பு என்று வரும்போது.. தந்தை அல்லது தாய், இவர்களில் யாருடன் இருந்தால் குழந்தையின் எதிர்காலம், கல்வி, மனநலம் மற்றும் நல்லொழுக்கம் மிகச் சிறந்த முறையில் நேர்மறையாக அமையும்? என்று ஆராய்வதே இந்த நேர்மறை சோதனையாகும்.

    Advertisement

    எது முக்கியம்?

    பெற்றோரில் ஒருவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவராக இருக்கலாம். இருப்பினும், நல்ல பெற்றோராக அவரால் இருக்க முடிகிறதா? என்றுதான் நீதிமன்றம் பார்க்கும். இந்த வழக்கில்.. தாயின் தற்போதைய தனிப்பட்ட நடத்தை மற்றும் அவர் நள்ளிரவில் காட்டிய அலட்சியம் ஆகியவை 7 மற்றும் 9 வயதுடைய குழந்தைகளின் ஒழுக்க நெறிமுறைகளையும் வளரும் பருவத்தையும் எதிர்மறையாக பாதிக்கும் என்று நீதிமன்றம் கருதிதான் தந்தையுடன் குழந்தைகளை வளர அனுமதித்துள்ளது.

    English Summary

    Madras HC denies mother custody: A husband had approached the court, stating that he did not want his children raised by his wife, who was engaging in late-night video calls with male friends and sharing explicit photographs. In the ensuing case, the court has issued a decisive order regarding who should have custody of the children.