TET: டெட் சிறப்பு தகுதி தேர்வுகளை வெளியிட சென்னை ஹைகோர்ட் உத்தரவு

  • சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 50 ஆக குறைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    Advertisement

    பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணித் தொடர்ச்சி மற்றும் பதவி உயர்வு தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் 1.9.2025 அன்று வழங்கிய தீர்ப்பு, நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Advertisement

    அந்தத் தீர்ப்பில் கல்வி உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களும் டெட் தகுதி பெற வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் மீதமுள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் டெட் தேர்ச்சி பெற வேண்டும்.

    பதவி உயர்வுக்கும் டெட் தகுதி அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை மாநில அரசே நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வு கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    இதனால் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த தேர்வில் பொது பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என ராமசந்திரன் உள்பட 3 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    அப்போது நீதிபதி ஆஷா முன்பு பதிலளித்த தமிழக அரசு, பொது பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கவுள்ளது. இதனால் கால அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஜூலை 24 தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

    இந்த நிலையில் இந்த தடையை நீக்க வேண்டும் என கோரி பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் தரப்பில் மனு தாக்க் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் இடைக்கால கோரிக்கை ஏதும் வைக்காத நிலையில் முடிவுகளை வெளியிட இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்வு முடிவுகள் மீதான தடையால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் அரசு தரப்பில் முறையிட்டது.

    Advertisement

    இதனை ஏற்ற நீதிபதி மும்மினேனி சுதீர்குமார், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான டெட் சிறப்பு தகுதித் தேர்வின் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கி உத்தரவிட்டார். ஜூலை மாதம் நடந்த தேர்வு முடிவுகளை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளித்துள்ளார். இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

    English Summary

    Madras Highcourt removes interim stay to release the Teacher Eligibility test and can the Teacher examination board release the results.