பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம்

  • சென்னை உயர் நீதிமன்றம் பசு வதைக்கு உடனடி தடை உத்தரவு: தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை
    சென்னை, மே 28, 2026: தமிழ்நாட்டில் பசு வதையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பால் உற்பத்தி மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 1976-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

    Advertisement

    இந்த உத்தரவு பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக வெளியானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் இந்த முக்கிய வழக்கை விசாரித்தனர். பக்ரீத் பண்டிகை அன்று (மே 28, 2026) உட்பட எந்த நாளிலும் தமிழ்நாட்டில் எங்கும் பசுக்களோ கன்றுகளோ வெட்டப்படக் கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் (DGP) உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும், இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் கண்டிப்புடன் அமல்படுத்த கீழ்நிலை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.

    Advertisement

    நீதிமன்றம் அளித்துள்ள இணக்க அறிக்கையை (Compliance Report) வரும் மே 29-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023-ஐ மேற்கோள் காட்டிய நீதிபதிகள், அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் ஆடு, செம்மறியாடு உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தினர்.

    யார் தொடுத்த வழக்கு?

    இந்து மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் கே. சூர்யா பிரசாந்த் (29) தாக்கல் செய்த பொதுநல மனுவை (PIL) விசாரித்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோயம்புத்தூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்களை வெட்ட தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.
    நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 48-ஐ சுட்டிக்காட்டினார்.

    Advertisement

    இந்தப் பிரிவு பசுக்கள், கன்றுகள், கறவை மாடுகள் மற்றும் உழவு மாடுகளைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடுகிறது. அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்களிலும் பசு இந்திய நாகரிகத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியடிகளுக்கு பசு பாதுகாப்பு மிக முக்கியமான விஷயம் என்பதையும், ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ உணவுக்காக பசுக்கள் பெருமளவில் வெட்டப்பட்டதையும் நீதிபதி நினைவுகூர்ந்தார்.

    பல முஸ்லிம் மன்னர்கள் தங்கள் ஆட்சியில் பசு வதையைத் தடை செய்ததையும், உச்ச நீதிமன்றம் பக்ரீத் அன்று அனைத்து முஸ்லிம்களும் பசு பலி கொடுப்பதில்லை என்று கூறியுள்ளதையும் அவர் மேற்கோள் காட்டினார். பசு வதை இஸ்லாமிய மதத்தின் கட்டாயக் கடமை அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

    Advertisement

    1976-ஆம் ஆண்டு அரசாணைக்கு சட்ட வலிமை உண்டு என்றும், அதை அரசு கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார். இந்தத் தீர்ப்பு இந்தியாவின் பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பசு பாதுகாப்பு இயக்கங்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளன. கிராமப்புற விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் இந்து அமைப்புகள் இந்த முடிவை வரவேற்று, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நாளை நடைபெற உள்ளது.

    English Summary

    Madras High Court Bans Cow Slaughter in Tamil Nadu Ahead of Bakrid 2026