100 கோடி பழனி கோவில் நிலம்! ரிஜிஸ்டரரை லீவில் அனுப்பி..வந்தவர் மூலம் பத்திர பதிவு! நீதிமன்றம் குட்டு

  • மதுரை: பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தனி நபருக்கு பதிவு செய்ததை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றக் கிளை. மேலும், வேண்டுமென்றே வழக்கமான அலுவலரை விடுப்பில் அனுப்பி, பொறுப்பில் வந்தவர் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், இது முற்றிலும் முறைகேடான காரியம்.. எனினும், சார்பதிவாளர் பணியிடை நீக்கம் என்பது போதுமானதாக இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலர் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமானதாக கூறப்படும் இடத்தின் ஆவணப்பதிவிற்கு அனுமதி வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    Advertisement

    சம்பந்தப்பட்ட இடம் தொடர்பாக ஏற்கனவே உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கோவிலின் தக்காரை சேர்க்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மடத்தின் சொத்துக்கள் தொடர்பான நிர்வாக அதிகாரம் தக்காரிடமே உள்ளது.

    இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டவிரோதமானது. எனவே பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மட நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    தொடர்ந்து அரசுத் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில், தனி நபர்கள் பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்த பத்திரப்பதிவு செல்லாது என குறிப்பிட்டனர். வெள்ளைத்துரை, சேதுபதி ஆகியோர் தங்கள் பெயரில் பதிவு செய்த பதிவை ரத்த செய்ததோடு சில கருத்துகளையும் தெரிவித்தனர்.

    Advertisement

    அதில்," கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய நீதிமன்றத்தை ஏமாற்றி உத்தரவு பெற்றுள்ளனர். விதிகளை மீறி பத்திரப்பதிவு அலுவலர்கள் எவ்வாறு இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்? பத்திரப்பதிவு அலுவலர்கள் முறைகேடு செய்வது எப்படி? முறைகேடாக நடந்த பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு செல்லாது. ரூ.100 கோடி நில மோசடியில் சார் பதிவாளரை மட்டும் சஸ்பெண்ட் செய்த அரசின் நடவடிக்கை போதுமானதல்ல" என்றனர்.

    English Summary

    Madras High Court cancels the registration of ₹100 crore Palani temple land, citing fraud and serious irregularities in the registration process.