இசக்கி சுப்பையாவுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்! தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

  • சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பிறகு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையாவுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரிய இசக்கி சுப்பையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் இசக்கி சுப்ப்பையா. 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, சட்டமன்றத்தில் விஜய் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தார்.

    Advertisement

    இதையடுத்து தகுதி நீக்க நடவடிக்கை தொடபாக அதிமுக தலைமை சபநாயகரிடம் இசக்கி சுப்பையா உள்பட கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தொடுத்தது. இந்த விவகாரம் நிலுவையில் இருக்கும் போதே இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.

    இதற்கிடையே, இசக்கி சுப்பையாவின் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை காந்தி நாதன் என்பவர் தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி. பாலாஜி முன்பு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி, இசக்கி சுப்பையாவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

    Advertisement

    அதே நேரத்தில் தேர்தல் வழக்கு தொடர்பான மனுவில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள சில பத்திகளை நீக்க வேண்டும் என்ற இசக்கி சுப்பையாவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற இசக்கி சுப்பையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English Summary

    The Madras High Court has ordered that the election case against Isakki Subbiah—who resigned his MLA post after winning the Ambasamudram constituency—will proceed. Isakki Subbiah's petition seeking the dismissal of the case against him has been rejected.