அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு

  • சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்ததில் குதிரை பேரம் நடந்து இருப்பதாகவும், சிபிஐ விசாரணை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குதிரை பேரம் நடந்ததற்கு என்ன ஆதாரம் என கேள்வி எழுப்பியது. மேலும் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பிளவு ஏற்பட்டுள்ளது. விஜய் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து இசக்கி சுப்பையா உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அன்றைய தினமே அவர்களுக்கு சென்னை தலைமை செயலகத்திலேயே தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

    Advertisement

    குதிரை பேரம் - சிபிஐ விசாரணை கோரி வழக்கு

    இந்த சூழலில் தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்ததில், குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 13 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இப்படி இருக்கும் போது தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மகரகதம் குமாரவேல், பெருந்துரை எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்து அன்றைய தினமே தவெகவில் இணைந்தனர். தலைமை செயலகத்தில் வைத்தே அவர்களுக்கு தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களுக்கே மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமென தவெக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    நீதிமன்றம் உத்தரவு

    அரசியல் லாப நோக்கத்தோடு இவர்கள் 4 பேரும் தவெகவில் இணைந்து இருக்கிறார்கள் என்பதால், இதில் குதிரை பேரம் நடந்து இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது குறித்து சிபிசி விசாரணை வேண்டும் தவறு செய்தவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கு ரூ.100 கோடி வரை அரசுக்கு செலவு ஆகும் என்பதாலும், லாப நோக்கத்தோடு கட்சி மாறி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேரையும் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சுசூத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி கி அருள் முருகன் ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குதிரை பேரம் நடந்ததற்கான ஆதாரம் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆதாரமின்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" என கூறினர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ராஜினாமா செய்த அன்றைய தினமே 4 எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்ததில் பெருந்தொகை கை மாறியிருப்பதாக சந்தேகம் எழுகிறது. தனிநபரால் இது குறித்து விசாரிக்க முடியாது என்பதால் சிபிஐ விசாரணை கோரியிருக்கிறேன்" என விளக்கமளித்தார். இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    Advertisement

    சிவி சண்முகம், விஜயபாஸ்கர்

    தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த 25 பேரில், மீதமுள்ள 21 எம்.எல்.ஏக்கள் எடப்பாடியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்களின் எம்.எல்.ஏ பதவி தப்பியது. அவர் எடப்பாடியை சந்தித்தனர். ஆனால் 21 எம்.எல்.ஏக்களில் சிவி சண்முகமும், சி விஜயபாஸ்கரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் இருந்து வந்தனர். இருவரும் தவெகவில் இணையலாம் என்று பேச்சு அடிபட்டு வருகிறது.

    இது ஒருபக்கம் இருக்க ஏராளமான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சிவி சண்முகமும், சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் தவெகவில் இணையலாம் என பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    Madras High Court questioned the evidence behind allegations of horse-trading in the resignation of four AIADMK MLAs. Hearing a plea seeking a CBI probe, the court asked for proof supporting the claims and reserved its verdict for a later date.