துணைவேந்தரும் இல்லை.. சிண்டிகேட்டும் இல்லை.. 14 பல்கலைக்கழகங்கள் என்ன ஆகும்? சென்னை ஐகோர்ட் கேள்வி

  • சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக 14 பல்கலைக்கழகங்கள் நிரந்தர துணைவேந்தர்கள் மற்றும் சிண்டிகேட் இல்லாமல் செயல்பட்டு வருவது உயர்கல்வி துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவர தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தர துணை வேந்தர் இல்லாத சூழலே நிலவுகிறது. இதற்கிடையே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    நீதிமன்றத்தில் வழக்கு

    இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிரந்தர துணைவேந்தர் இல்லை என்றும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவே பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பல்வேறு நிர்வாக மற்றும் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.

    இதையடுத்து ஏற்கெனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மேற்கோள் காட்டினார். துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் 14 பல்கலைக்கழகங்களில் முக்கியமான நிர்வாக முடிவுகளை பொறுப்பு பதிவாளரும் நிர்வாகக் குழுவும் எப்படி எடுக்கின்றன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அந்த அமர்வு உத்தரவிட்டிருந்தது.

    Advertisement

    சாத்தியமில்லை

    ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவால் பல்கலைக்கழகங்களையும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளையும் முழுமையாக நிர்வகிப்பது சாத்தியமில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். தொடர்ந்து மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக பல்கலைக்கழகங்கள் இதே நிலையில் செயல்படுவது அவற்றின் கல்வி மற்றும் நிர்வாக செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.

    ஓவர் ஆட்டம்.. டிரம்புக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கடிதம்!

    இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலத்தின் உயர்கல்வி துறை பாதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதையடுத்து இந்த வழக்கில் தமிழக உயர்கல்வி துறைச் செயலாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்தது.

    Advertisement

    திட்டம் என்ன?

    மேலும், கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக துணைவேந்தர்களும் சிண்டிகேட்டும் இல்லாமல் செயல்பட்டு வரும் 14 பல்கலைக்கழகங்களையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர மாநில அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்பது குறித்து உயர்கல்வி துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    English Summary

    Madras High Court has expressed concern over 14 Tamil Nadu universities functioning without permanent vice-chancellors(துணை வேந்தர் வழக்கு சென்னை உயர் நீதிமன்றம்): Tamil Nadu Universities Without Vice-Chancellors latest news in tamil.