50000 ஃபைன் போட்ருவேன்..முதல்வர் விஜய்க்கு வார்னிங் கொடுத்த ஹைகோர்ட்! ஆதவ் அர்ஜுனாவுக்கு எச்சரிக்கை!

  • சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றது மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி வியாழக்கிழமைக்குள் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது நீதிமன்றம்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் அவரது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் அந்த பகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்தனர்.

    Advertisement

    இதுபோல திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். மேலும் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதற்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்குகள் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரித் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86வது பிரிவின் படி தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனிதாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவித்து இருந்ததாக சுட்டிக் காட்டினார்.

    Advertisement

    அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் தேர்தல் வழக்கு நிராகரிக்க கூறி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதற்கும் அவச அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பினரும் கேட்ட இரண்டு வார கால அவகாசத்தை வழங்க மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை மட்டும் அவகாசம் வழங்கினார்.

    அதற்குள் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்களைத் தாக்கல் செய்யாவிட்டால், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்புக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    English Summary

    Madras High Court gives Vijay and Aadhav Arjuna until August 27 to file pleas, warning of Rs 50,000 fine for delay.