மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர்கள் குடும்ப விழா போல நடந்துருக்கு! நயினார் ஆவேசம்

  • சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், அமைச்சர்களின் குடும்ப விழா போல நடந்து இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அமைச்சர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தீர்த்தத்திற்கு பாட்டில் தண்ணீரை வாளி பக்கெட்டில் கலந்து அப்பாவி மக்களை உங்கள் அரசு ஏமாற்றுவது எத்தனை பெரிய பாவம்? என விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் யாருக்கானது? வெறும் பணக்காரர்களுக்கு மட்டுமானதா விஜய் அவர்களே?.. 17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மாநகரில் நடக்கும் இந்த மகா கும்பாபிஷேகத்தை கண்டுகளிக்க சாமானிய மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உங்கள் அரசின் ஆணவத்திற்கான மற்றுமொரு சான்று.

    இந்த கும்பாபிஷேகத்தை மக்கள் நேரில் கண்டு களிப்பதற்கென அச்சடிக்கப்பட்ட சுமார் 9000 Pass-கள் எங்கே போயின முதல்வரே? உங்கள் அமைச்சர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே pass-களை வழங்கி, அவர்களை முதல் வரிசையில் அமர வைப்பதற்கா அரசு செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது?

    Advertisement

    நேற்று மாலை முதல் கால்கடுக்க காத்திருப்பவர்களை, கும்பாபிஷேகம் நடக்கும் கோவிலின் அருகில் கூட நெருங்க விடாமல் உங்கள் அரசு தடுப்பதற்கு பக்தகோடிகள் என்ன பயங்கரவாதிகளா?.. பணம் படைத்தவர்களுக்கும், VIP - களுக்கும் மட்டும் தான் கோவிலுக்குள் அனுமதி என்று நீங்களே ஒரு நவீன தீண்டாமையை அரங்கேற்றுவது, என்ன மாதிரியான மனநிலை?

    பொதுவாக கும்பாபிஷேகம் நடைபெறும் கோவில்களில், தனி குழாய் ட்ரோன் மூலம் கோவிலைச் சுற்றியுள்ள பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்படும் நிலையில், பாட்டில் தண்ணீரை வாளி பக்கெட்டில் கலந்து அப்பாவி மக்களை உங்கள் அரசு ஏமாற்றுவது எத்தனை பெரிய பாவம்?

    Advertisement

    கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சடிப்பதில் இதுநாள் வரையிலும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றினீர்கள், கோவில் அறங்காவலர்களின் பெயர்களை உங்கள் இஷ்டத்திற்கு அழைப்பிதழில் இருந்து நீக்கினீர்கள், தற்போது பொதுமக்களுக்கு புண்ணியம் கிடைக்கக் கூடாது என முட்டுக்கட்டை போட்டுள்ளீர்கள்.

    மொத்தத்தில், மதுரை பொறுப்பு அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோரின் அதீத தலையீட்டினாலும், உங்கள் அலட்சியத்தாலும் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் ஏதோ உங்கள் அமைச்சர்களின் குடும்ப விழாவினை போல நடந்து முடிந்துள்ளது. இவை உங்கள் ஆட்சியின் மீது விழுந்த கரும்புள்ளிகள்.. என்று கூறியுள்ளார்.

    English Summary

    Tamil Nadu BJP President Nainar Nagendran has stated that the Maha Kumbabishekam of the Madurai Meenakshi Amman Temple was conducted as if it were a family function for the ministers. Alleging that entry passes were issued only to those close to the ministers, he questioned the government: "What a grave sin it is for your government to deceive innocent people by mixing bottled water into buckets to serve as the holy *Theertham*?"