மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போறீங்களா? தாம்பரம், நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

  • சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி மதுரைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து நாளை மாலை மதுரைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நெல்லையில் இருந்தும் நாளை மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

    Advertisement

    மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப் புகழ் பெற்றது. இந்த திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் நாளை மறுநாள் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. வெகு விமரிசையாக நடைபெறும் கும்பாபிஷேகத்தினை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    Advertisement

    மதுரைக்கு சிறப்பு ரயில்

    உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருகை தருவார்கள். இதனால் மதுரைக்கு செல்லும் ரயில், பஸ்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பயணிகளும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் பயணிகளின் வசதிக்காக சென்னை தாம்பரம் மற்றும் நெல்லையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    எப்போது புறப்படும்?

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரயில் (வண்டி எண்.06159), மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரையை சென்றடையும்.

    Advertisement

    மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 2 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரயில் (06160) அதே நாள் இரவு 9.45 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்தடையும்.

    நெல்லை - மதுரை சிறப்பு ரயில்

    இதே போன்று, நெல்லையில் இருந்து நாளை புதன் கிழமை மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து சேரும். பிறகு இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Madurai Meenakshi Amman Temple: Southern Railway has announced special trains to Madurai in connection with the consecration ceremony of the Madurai Meenakshi Amman Temple. For the convenience of passengers, an unreserved special train has been announced from Chennai Tambaram to Madurai for tomorrow evening. Similarly, a special train will also be operated from Nellai to Madurai tomorrow.