இதுதான் தமிழ்நாடு! மதுரை ஆளும் மீனாட்சி! கோபுர தரிசனத்துக்கு வந்த மக்கள்..குளிர வைத்த இஸ்லாமியர்கள்

  • சென்னை: உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா விமர்சையாக நடைபெற்றது. 12 கோபுரங்கள் மற்றும் 2 தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை காண வந்த பக்தர்களுக்கு நீர், மோர், குளிர்பானம் கொடுத்து இஸ்லாமிய மக்கள் உபசரித்தது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்தது.

    Advertisement

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

    Advertisement

    17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 8.4.2009 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

    திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 11 முதல் 17-ஆம் தேதி வரை 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள் மற்றும் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

    Advertisement

    புனித நீர் கலசங்களில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும், மேலும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டிருந்தது. 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருட்களைக் கொண்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை முன்நின்று நடத்தினர்.

    இன்று காலை 7.40 மணிக்கு அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், காலை 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. விழாவில், முத்தாய்ப்பாக மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை காண வந்த பக்தர்களுக்கு நீர், மோர், குளிர்பானம் கொடுத்து இஸ்லாமிய பெருமக்கள் உபசரித்தனர்.

    Advertisement

    தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து பொது மக்கள் கோவிலை நோக்கி படையெடுத்து தரிசனம் செய்ய வந்தனர். இந்த நிலையில் மதுரை பறநகரில் இருந்து வந்த பக்தர்கள் தெற்குவாசல் பகுதியில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தண்ணிர் பாட்டீல்கள், குளிர்பானங்கள், மோர், ரோஸ் மில்க் என பல்வேறு வகையான குளிர்பானங்களை இஸ்லாமியர்கள் மதம் கடந்து மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்குக்கு வரும் பக்தர்களுக்கு அன்புடன் வணங்கி உபசரித்தனர்.

    பொதுமக்களும் இன் முகத்துடன் ஆர்வத்துடன் வாங்கி பருகினர் இந்த காட்சிகள் தற்போது மதுரை மக்களை நெகிழ்சியடைய செய்துள்ளது. மதம் கடந்து அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என நாங்கள் பழகி வருகின்றோம்.. எங்களது சேவை தொடரும் என்கின்றனர் இஸ்லாமிய நண்பர்கள்..

    English Summary

    Thousands attend Madurai Meenakshi Temple Kumbabhishekam as Muslim residents serve water, buttermilk and drinks to devotees.