இன்று மதுராந்தகத்தில் பிரதான கட்சி வேட்பாளர்கள் யாருமே வாக்களிக்க முடியாது.. ஏன் தெரியுமா?

  • செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் களத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவல் கவனம் பெற்றுள்ளது. அதாவது மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்களில் நாம் தமிழர் வேட்பாளரை தவிர மற்ற யாருக்குமே மதுராந்தகம் தொகுதியில் வாக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் தற்போது இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    Advertisement

    இந்த முறை மதுராந்தகம் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, சிபிஎம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மதுராந்தகம் தொகுதியிலும் கடும் போட்டி நிலவுகிறது. மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மற்றும் ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி) வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்களில் நாம் தமிழர் வேட்பாளரை தவிர மற்ற யாருக்குமே மதுராந்தகம் தொகுதியில் வாக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு திருப்போரூர் தொகுதியில் வாக்கு உள்ளது. இதனால் அவர் மதுராந்தகத்தில் போட்டியிட்டாலும், தனது வாக்கை இங்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Advertisement
    மதுராந்தகம், தாராபுரத்தில் அக்னி பரீட்சை! சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள்?

    திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு எழும்பூரில் வாக்கு உள்ளது. அதேபோல் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்துக்கு செங்கல்பட்டில் வாக்கு உள்ளது. சிபிஎம் வேட்பாளர் சுகந்திக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்கு உள்ளது. இதனால் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்த 4 முக்கிய கட்சி வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் சட்டமன்ற தொகுதியில் தங்களது வாக்கை செலுத்த முடியவில்லை. ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அந்த தொகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதே இதற்கு காரணமாகும்.!

    Advertisement

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜானகிராமனுக்கு மட்டும் மதுராந்தகம் தொகுதியில் வாக்கு உள்ளது. அவர் தனது சொந்த ஊரான தருமபுரம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதனால் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்களில் இன்று தனது வாக்கை செலுத்திய ஒரே வேட்பாளர் நாம் தமிழர் வேட்பாளர் மட்டுமே!

    English Summary

    A curious detail has emerged in the Madurantakam Assembly bypoll. Among the major party candidates(மதுராந்தகம் இடைத்தேர்தல் சுவாரஸியம்): NTK candidate Janakiraman has a vote in the Madurantakam Bypoll.