வன்னியர்களின் ஓட்டு யாருக்கு? மதுராந்தகத்தில் பாமக மௌனம்! அப்படியே பிரியும் வாக்குகள்!

  • சென்னை: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 முனை போட்டி நிலவும் நிலையில், பாமக சைலன்ட் மோடில்.. யாருக்கும் ஆதரவளிக்காமல் விலகிக்கொண்டது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவின் ஆதரவோடுதான் இங்கு அதிமுக வெற்றி பெற்றிருந்தது. இப்போது பாமக விலகிக்கொண்டதால், வன்னியர் வாக்குகள் யாருக்கு போகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

    Advertisement

    அதிமுக கூட்டணியில் பாமகவின் பலத்த ஆதரவோடு போட்டியிட்ட மரகதம் குமரவேல் கடந்த முறை வெற்றி பெற்றிருந்தார். ஆனால், முன்றே வாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அப்படியே ஆளும் தவெகவில் போய் இணைந்துக்கொண்டார். இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. மரகதம் குமரவேல் விலை போய்விட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இடைத்தேர்தலில் மீண்டும் அவரே தவெக சார்பில் களமிறங்கியிருக்கிறார்.

    கடந்த தேர்தல்களை பொறுத்தவரை, இந்த தொகுதி எப்போதும் அதிக வாக்குப்பதிவை பதிவு செய்யும் தொகுதியாகும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 93.36% வாக்குகள் பதவாகியிருந்தன. 2021 தேர்தலில் அதிமுக+பாமக கூட்டணி 46.62% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தது. திமுக 44.7% வாக்குகளை பெற்றிருந்தது.

    Advertisement

    2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜக கூட்டணியில் நின்று 9.57% பிரித்தது. இருந்தாலும் வெற்றிப்பெற முடியவில்லை. திமுக 44.7% வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றது.

    2026ல் அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் தவெகவின் வரவு அனைத்து கட்சிகளையும் பாதித்தது. இருப்பினும் பாமக 34.95% வாக்குகளை பெற்று அபார வெற்றியை பெற்றது. 31.32% வாக்குகளை பெற்று தவெக இரண்டாம் இடம் பிடித்தது. திமுகவை பொறுத்தவரை 30.18% வாக்குகளை அக்கட்சி பெற்றிருந்தது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 9 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டிருந்தனர். இந்த முறை 27 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். முக்கியமாக 5 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக தனது சொந்த தொகுதியை தக்கவைக்க குதிரை பேர குற்றச்சாட்டை முன்வைத்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறது. வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கனிதா சம்பத் போட்டியிடுகிறார்.

    Advertisement

    தவெக சார்பில் மரகதம் குமரவேல் களமிறக்கப்பட்டிருந்தாலும், கடந்த 4 மாதக்கால தவெக ஆட்சிக்கு மக்கள் எவ்வளவு மார்க் போடுவார்கள் என்கிற பயம் கட்சிக்குள் இருக்கிறது. அதேபோல திமுக இழந்த தனது செல்வாக்கை மீட்க எழும்பூர் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமனை களமிறங்கியிருக்கிறது. இந்த முறை திமுகவுடன் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகள் இல்லை.

    அதேபோல இந்த தேர்தலில் தவெகவுக்கு தலைவலியாக இடதுசாரிகள் உருவெடுத்திருக்கிறார்கள். கட்சித்தாவல் காரணமாக கொண்டுவரப்பட்ட இந்த இடைத்தேர்தலை அவர்கள் எதிர்ப்பதால், தனித்து களமிறங்கியிருக்கின்றனர். சிபிஎம் சார்பில் சுகந்தி களமிறக்கப்பட்டிருக்கிறார். மறுபுறம் நாதக சார்பில் ஜானகிராமன் களமிறக்கப்பட்டிருக்கிறார். இப்படியாக தொகுதியில் 5 முனைப்போட்டி ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    அதிமுக கூட்டணியிலிருந்து தற்போது பாமக தனித்து நிற்பதால், அக்கட்சிக்கு இருந்த கணிசமான வன்னியர் சமூக வாக்குகள் யாருக்கு சாதகமாக போகும்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே மதுராந்தகம் தொகுதி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

    English Summary

    Madurantakam Bypoll: A by-election is currently set to take place in the Maduranthakam Assembly constituency. Amidst a five-cornered contest, the PMK has notably opted to stay out of the fray—remaining in 'silent mode' and refraining from extending support to any candidate.