ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே! TVK VS ADMK.. டஃப் கொடுக்குமா திமுக? மதுராந்தகம் ரிப்போர்ட்!

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கு அருகே இருப்பதால் என்னவோ மதுராந்தகத்தை சுற்றி தான் பலரது பார்வையில் இருக்கிறது. இந்த நிலையில் விஜய் அலையையும் தாண்டி 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வென்ற நிலையில் தற்போதைய நிலவரம் என்ன? தற்போதும் அதிமுக வெல்லுமா? அல்லது தமிழக வெற்றி கழகம் வெல்லுமா? என்ற பரபரப்பு நீடிக்கிறது. அதே நேரத்தில் திமுகவும் சம வலிமையுடன் களத்தில் இருப்பதால் போட்டி மேலும் பரபரப்பாகி உள்ளது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப் பெருங்கட்சியாக தமிழக வெற்றி கழகம் வென்றாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதை அடுத்து திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைத்தார்.

    Advertisement

    சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்பாராத சில நிகழ்வுகள் நடந்தன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கொறடா அக்ரிகிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    அவர்களில் ஒருவர்தான் மதுராந்தகம் தொகுதியில் எம்எல்ஏவான மரகதம் குமரவேல். ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தவர். மக்கள் மத்தியில் அறிமுகமானவர். தமிழக முழுவதும் விஜய் அலையில் திமுகவின் அமைச்சர்களும், அதிமுகவின் முன்னணி தலைவர்களும் தோல்வியை சந்தித்த போதும் கிட்டத்தட்ட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியவர் என்ற பெருமையைக் கொண்டவர் இவர்.

    Advertisement

    திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதால்தான் இணைந்தேன் எனக் கூறியிருந்தார். இதற்கிடையே மதுராந்தகத்தில் சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அவரே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சி பலத்தோடு தனித்த செல்வாக்கோடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மதுராந்தகம் மரகதம் குமரவேல்.

    அதற்கு முன் கடந்த தேர்தல் முடிவுகளை சற்று பார்க்கலாம். அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் அமுலு பொன்மலர், தமிழக வெற்றிக் கழகத்தின் எழில் கேத்தரின், நாம் தமிழரின் ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கினர். ஒரு லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் பதிவான நிலையில் 69 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மரகதம். தவெக எழில் சுமார் 62 ஆயிரம் வாக்குகளும், திம்க வேட்பாளர் திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59 ஆயிரம் வாக்குகளும் பெற்றிருந்தார்.

    Advertisement

    தவெகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 7000 என்ற நிலையில், திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3000 ஆக இருந்தது. ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் நாதகவின் ஜானகிராமன் வெறும் 4950 வாக்குகள் தான் பெற்றிருந்தார். தற்போது திமுக சார்பில் பரந்தாமன், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மரகதம் குமரவேல், அதிமுகவின் அனிதா சம்பத் நாம் தமிழர் கட்சியின் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 28 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு வேட்பாளரின் மன தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 27 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க வெல்லப் போவது யார்? என்ற கேள்வி மிக முக்கியமாக எழுந்துள்ளது.

    Advertisement

    மதுராந்தகத்தை பொறுத்தவரை இரட்டை இலைக்கு தனித்த வாக்கு வங்கி இருக்கிறது. அதே நேரத்தில் மதுராந்தகம் மரகதம் குமரவேலுக்கும் பெரிய ஆதரவாளர் மட்டும் இருக்கிறது. எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் , தனிப்பட்ட செல்வாக்கு, ஸ்வீட் பாக்ஸ், சமூக ஆதரவு என குறிப்பிட்ட வாக்கு வங்கி அவருக்கு இருக்கிறது. தற்போது ஆளுங்கட்சி என்ற பலம் கூடுதலாக இருப்பதால் வென்று விடலாம் என நம்பிக்கையில் உள்ளார்.

    ஆனாலும், செல்லும் இடங்களில் அதிமுகவினர் - பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. விஜய் அலையையும் தாண்டி நாங்கள் வாக்களித்து வெற்றி பெற்றவர் தவெகவில் சேர்ந்து விட்டார் என்ற ஆதங்கத்தை அவர்களிடம் பார்க்க முடிகிறது. இதனால் அவரது வெற்றி சற்று சிரமம் என்கின்றனர் அதிமுகவினர்.

    Advertisement

    அதே நேரத்தில் இந்த தேர்தலில் போட்டியில் தவெகவுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் அதிமுக இருக்கிறது. போல விஜய் அலையை தாண்டி மதுராந்தகத்திலும் அதுவும் தனி தொகுதியில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் இல்லை. திமுக வேட்பாளரின் மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்ற அதிமுக தற்போது வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் கணித சம்பத்தை களம் இறக்கி இருக்கிறது.

    கடந்த தேர்தலில் பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தாலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை, உடைந்து கிடக்கும் அதிமுக என சில சாதகமான அம்சங்களை பயன்படுத்தி வென்று விடலாம் என திமுகவும் களத்தில் இருக்கிறது. தற்போதைக்கு தவெக -அதிமுக -திமுக இடையே தான் போட்டி என சொல்லப்பட்டாலும் முன்னணியில் இருப்பது அதிமுகவும் தவெகவும் தான். கடைசி நேர ரிசல்ட் என்னவாக இருக்கும் என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்யப் போகிறார்கள்.

    English Summary

    Madurantakam bypoll intensifies as TVK, AIADMK and DMK compete closely, with Maragatham Kumaravel facing Anita Sampath and Parandhaman.