சில்வர் ஜூப்ளி அடிக்கும்னு சொன்னீங்க..வேலைக்காகாத எடப்பாடி வியூகம்! சண்டை செய்ய ரெடியான வேலுமணி & கோ

  • சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகிக்கும் நிலையில், திமுக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த தேர்தலில் இரு தொகுதிகளிலும் வென்ற அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி அதிகரித்து இருக்கிறது. இனி எடப்பாடி வேலைக்காக மாட்டார் என போர்க்கொடி தூக்க தயாராகி வருகின்றனர் வேலுமணி & கோ என்கின்றனர்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தல் கால பரபரப்புகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது மதுராந்தகம் தாராபுரம் ஆகிய 2 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.

    Advertisement

    கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் சத்தியபாமாவும் மரகதம் குமரவேலும் போட்டியிடுகின்றனர்.

    திமுக தரப்பில் பரந்தாமன், சுகன்யா போட்டியில் குதித்தனர். அதிமுகவின் கணிதா சம்பத் பானுமதியும் போட்டிக்கு வந்தனர். இது மட்டுமில்லாமல் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் குதித்தனர். இதனால் இந்த தேர்தலில் 5 முனை போட்டி உருவானது என சொல்லப்பட்டாலும், தவெக - திமுக - அதிமுக இடையே தான் போட்டி இருந்தது.

    Advertisement

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் 2 தொகுதிகளிலுமே தமிழக வெற்றி கழகம் முன்னிலை பெற்றது. மதுராந்தகத்தில் அந்த முன்னிலையை தொடர்ந்து தக்க வைத்த மரகதம் குமரவேல் வெற்றி முகத்தை நோக்கி பயணித்து வருகிறார். அதே நேரத்தில் இடையில் திடீரென தாராபுரத்தில் முதலிடத்தில் அதிமுகவின் பானுமதி சென்ற நிலையில் கொண்டாட்டத்தில் அதிமுக மூழ்கியது. சிறிது நேரத்தில் கள நிலவரம் மாறத் தொடங்கியது. தாராபுரத்திலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் வகித்தது.

    12 மணி நிலவரப்படி சுமார் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தாராபுரம் சத்யபாமா தமிழக வெற்றி கழகத்தின் சத்திய பாமா முன்னிலை வகிக்கிறார். திமுகவின் சுகன்யா 28 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். அதிமுகவின் பானுமதி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். தவெக - அதிமுக இடையான வாக்கு வித்தியாசம் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கு மேல் இருந்தது.

    Advertisement

    இந்த நிலையில் 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்ததும் திமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டார் என வேலுமணி, சிவி சண்முகம் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்களில், சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், ஜெயக்குமார்,மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக கட்சி கழகத்தில் இணைந்தனர்.

    அதே நேரத்தில் வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட சில அதிமுக எம்எல்ஏக்கள் இன்னும் எடப்பாடி மீது அதிருப்தியில் தான் இருக்கின்றனர். இந்த தேர்தலில் அதிமுக 2 அல்லது 1தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமை காரணமாகவே வெற்றி பெற்றோம்.. ஆளுங்கட்சியை தாண்டி வெற்றி கிடைத்துவிட்டது என கொண்டாடத்தில் ஈடுபடலாம் என்பது தான் எடப்பாடி தரப்பின் திட்டமாக இருந்தது. ஆனால் கள நிலவரம் வேறாக இருக்கிறது.

    Advertisement

    கடந்த தேர்தலில் முதலிடத்தை பெற்றிருந்த அதிமுக இந்த இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி எதுவுமே இல்லை, தற்போது கிடைத்த வாக்குகளும் இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள் தான்.. இனி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை வழிநடத்தினால் உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என பேசலாம் என காத்திருந்த வேலுமணி & கோவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

    2 தொகுதிகளில் 2வது இடத்துக்குக் கூட அதிமுக வரமுடியாது என தற்போதைய நிலவரம் சொல்லும் நிலையில் குஷியில் இருக்கின்றனர் வேலுமணி & கோவினர். தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகு வரும் நாட்களில் அதிமுக மீண்டும் கலவர சூழலுக்குத் தள்ளப்படலாம் என்கின்றனர்.

    English Summary

    TVK leads in Madurantakam and Dharapuram, putting AIADMK under pressure and sparking speculation about internal dissent against Edappadi Palaniswami.