மதுராந்தகம், தாராபுரம் ரிசல்ட்.. தவெக வென்றால் என்ன ஆகும்? திமுக வென்றால் என்ன ஆகும்? முழு கணக்கு

  • சென்னை: தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் எதனால் வந்தது, வேட்பாளர்கள் யார், தேர்தல் முடிவுகளால் சட்டமன்றத்தில் எந்தெந்தக் கட்சிகளின் பலம் எப்படி மாறும் என்பதை மிக எளிய முறையில் இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    தேர்தல் வரக் காரணம் என்ன?

    கடந்த பொதுத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றனர்.

    Advertisement

    துராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் கே. மரகதம் குமரவேல்
    தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் பி. சத்யபாமா

    பின்னர் இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள் யார்?

    இரு தொகுதிகளிலும் பலமுனைப் போட்டி நிலவுகிறது. மதுராந்தகத்தில் 27 வேட்பாளர்களும், தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகம் (தவெக): அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான கே. மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் பி. சத்யபாமா (தாராபுரம்) ஆகியோரே மீண்டும் தவெக வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

    Advertisement

    திமுக: மதுராந்தகத்தில் இ. பரந்தாமன் உள்ளிட்ட வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.
    அதிமுக:*மதுராந்தகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ். கணிதா சம்பத் உள்ளிட்டோரை நிறுத்தி இரு தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற தீவிர முயற்சி செய்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன. பாமக இந்த இடைத்தேர்தலில் நடுநிலை வகிக்கிறது.

    தற்போதைய சட்டமன்ற பலம் மற்றும் காலியிடங்கள்

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்த இடங்கள் 234. இதில் ஆட்சி அமைக்க அல்லது அறுதிப் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை.

    தற்போதைய நிலவரப்படி சட்டமன்றத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளன.
    தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 227
    ஆளும் தவெக தனித்து 107 இடங்களை வைத்துள்ளதுடன், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையைத் தக்கவைத்துள்ளது.
    பிரதான எதிர்க்கட்சிகளாக திமுக 73 மற்றும் அதிமுக 47 எம்எல்எங்களுடன் கணிசமான பலத்துடன் உள்ளன.

    Advertisement

    இன்று வெளியாகும் முடிவுகள் மூலம் இந்த 7 காலியிடங்களில் 2 இடங்கள் நிரப்பப்படும்.

    தவெக-வின் தொகுதி கணக்கு: முடிவுகள் எப்படி அமையும்?

    நிலைமை 1: தவெக 2 இடங்களிலும் வெற்றி பெற்றால்

    தவெக-வின் சொந்த பலம் 107-லிருந்து உயர்ந்து 109 ஆக மாறும். இது ஆளும் கட்சிக்கு மக்கள் மத்தியில் கூடுதல் செல்வாக்கையும், தேர்தல் அங்கீகாரத்தையும் கொடுக்கும். தனி மெஜாரிட்டியான் 118 மெஜாரிட்டிக்கு அருகில் வரும்.

    நிலைமை 2: தவெக 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றால்

    தவெக-வின் எம்.எல்.ஏ எண்ணிக்கை 107-லிருந்து 108 ஆக உயரும். கௌரவமான வெற்றியாக இது பார்க்கப்படும்.

    Advertisement

    நிலைமை 3: தவெக 2 இடங்களிலும் தோல்வியடைந்தால்

    தவெக-வின் பலம் தற்போதைய 107 என்ற அளவிலேயே நீடிக்கும். ஆளும் அரசுக்குக் கூட்டணிக் கட்சிகளின் தயவு தொடர்ந்தாலும், அரசியல் ரீதியாக பின்னடைவாகப் பேசப்படும்.

    திமுக-வின் தொகுதி கணக்கு: முடிவுகள் எப்படி அமையும்?

    நிலைமை 1: திமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றால்

    திமுக தனது சொந்த பலத்தை 2 இடங்கள் அதிகரித்துக்கொள்ளும். அதாவது திமுக பலம் 75 ஆகும். ஆளுங்கட்சிக்கு எதிராகத் தேர்தல் களத்தில் கடுமையான சவால் விடுக்க முடிந்தது என்ற மிகப்பெரிய அரசியல் வெற்றியை திமுக பெறும்.

    நிலைமை 2: திமுக 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றால்

    திமுக-வின் சட்டமன்ற பலம் 1 இடம் கூடும். அதாவது 74 ஆகும். களத்தில் தனது வாக்கு வங்கி வலுவாக இருப்பதை எதிர்க்கட்சியாக திமுக நிரூபிக்கும்.

    Advertisement

    நிலைமை 3: திமுக 2 இடங்களிலும் தோல்வியடைந்தால்

    திமுக-வின் எம்.எல்.ஏ பலத்தில் எந்த மாற்றமும் இருக்காது. எதிர்க்கட்சியாக இடைத்தேர்தலில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பை இழக்கும்.

    இந்தத் தேர்தல் முடிவு ஏன் முக்கியம்?

    அரசாங்கத்தின் பெரும்பான்மைக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு முக்கிய அரசியல் பரீட்சையாக இந்த இரண்டு தொகுதி முடிவுகளும் பார்க்கப்படுகின்றன.

    English Summary

    Madurantakam & Dharapuram Bypoll Results: Assembly Seat Maths, Key Candidates,