அக்டோபர் 6.. ஜட்ஜ்மெண்ட் டே! மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் தான் 2 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாம் ஓய்ந்தது. இதையடுத்து வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் 6ஆம் தேதி மாலை 6 மணி வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் கூட கடக்காத நிலையில் அடுத்த தேர்தலை சந்திக்க இருக்கிறது தமிழகம். மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    தற்போது அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக அதிமுகவில் இருந்து விலகி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள மரகதம் குமரவேல், சத்யபாமா ஒரு மீண்டும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக தரப்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் போட்டியிடுகின்றனர். இதைப் போல மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகு​தி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் லட்​சுமணனும், மது​ராந்​தகம் தொகு​தி​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் சுகந்​தி​யும் போட்​டி​யிடு​கின்​றனர்.

    Advertisement

    இதனால், இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தற்போது 2 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். குறிப்பாக தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அந்த இரண்டு தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    Advertisement

    இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் இரு தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்தது. வரும் 6ஆம் தேதி வாக்கு பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. தாராபுரத்தில் இன்று மீண்டும் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். 2 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிந்ததால் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள், வெளியூர்காரர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    அக்டோபர் 6ஆம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். இன்று மாலை 6:00 மணி முதல் அங்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இன்று மாலை முதல் அக்டோபர் 6ஆம் தேதி மாலை வரை பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது எனவும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், ரேடியோக்கள் வாட்ஸாப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான எந்த தகவலையும் வெளியிடக்கூடாது.

    Advertisement

    பொதுமக்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க கூடாது. இவற்றை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், வெளியூர் அரசியல் நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

    லாட்ஜ்கள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் வெளி ஆட்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும். வாக்குப்பதிவு நாளில் வேட்பாளரின் சொந்த பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். வாக்காளர்களை அழைத்து வருவதற்கோ அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு வேட்பாளர்கள் அல்லது அவரது முகவர் ஜ்க் வாகனத்தை வாடகைக்கு வாங்கவோ அனுமதி கிடையாது. தேர்தல் அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு வெளியே தான் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Campaigning for Madurantakam and Dharapuram bypolls ends today, with voting on October 6 and counting scheduled for October 9.