மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்.. சம்பளத்துடன் கூடிய விடுமுறை! அதிரடியாக வெளியான அறிவிப்பு!

  • சென்னை: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் அன்று அனைவரும் வாக்களிக்கும் வகையில் அந்த இரண்டு தொகுதிகளில் அமைந்துள்ள பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு முதல்வர் விஜய் தனது பெரம்பூர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, கரூர் ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

    Advertisement

    மற்ற தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிறுவையில் இருப்பதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப் பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கவிருக்கிறது.

    மதுராந்தகம் இடைத்தேர்தல்

    இந்த தேர்தலில் ஆளும் தமிழக வெற்றிக் கழக கூட்டணி, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், இடதுசாரிகள் என ஐந்து முனை போட்டி உருவாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஏராளமான சுயேச்சைகளும் களமிறங்கியுள்ளனர். மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரகதம் குமரவேல், திமுக தரப்பில் பரந்தாமன், அதிமுக தரப்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் களமிறங்கியுள்ளனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றார். இதனால் தற்போது களத்தில் 27 வேட்பாளர்கள் இருக்கின்றனர்.

    Advertisement

    தாராபுரம் இடைத்தேர்தல்

    தாராபுரத்தில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக தரப்பில் சுகன்யா, அதிமுக தரப்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் லட்சுமணன், நாம் தமிழர் தரப்பில் கார்த்திகா உள்ளிட்ட பலர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 22 பேரில் வேட்பு மனுக்கள் இயக்கப்பட்டது. இதில் யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெறாததால் தாராபுரம் தொகுதியில் 14 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 22 பேர் களத்தில் இருக்கின்றனர்.

    சின்னம் ஒதுக்கீடு

    தற்போது அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களின் வரிசை எண் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுயாட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று அனைவரும் வாக்களிக்கும் வகையில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி உட்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    பொது விடுமுறை

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில்," செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இந்த 2 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் அக்டோபர் 6-ந் தேதி பொது விடு முறை அளிக்கப்படுகிறது.

    சம்பளத்துடன் விடுமுறை

    மேலும், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தாலும், மதுராந்தகம் (தனி) அல்லது தாராபுரம் (தனி) தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர்க ளுக்கும் அக்டோபர் 6-ந் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப் பாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவ னங்கள் அன்றைய தினம் மூடப்பட்டு இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu announces a paid holiday on October 6 for Madurantakam and Dharapuram voters ahead of the bypolls.