மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! நாளை வாக்கு எண்ணிக்கை! வெல்வது யார்? நிர்மல் சொன்னது நடக்குமா?

  • சென்னை: தமிழகத்தில் நடந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்தன. இவற்றில் 5 தொகுதிகள் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    Advertisement

    மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    தாராபுரம்

    தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தாராபுரத்தில் 320 வாக்குச் சாவடிகள் உள்ளன.

    மதுராந்தகம்

    மதுராந்தகத்தில் 85 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 80 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை விட இது குறைவு. கடந்த தேர்தலில் முறையே 93 சதவீதம், 89 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மதுராந்தகத்தில் 7.23 சதவீதமும் தாராபுரத்தில் 9.58 சதவீத வாக்குகளும் குறைந்துள்ளன.

    Advertisement

    வாக்கு சதவீதம் குறைய காரணம்

    தவெக அரசின் மீதான அதிருப்தியால்தான் வாக்கு சதவீதம் குறைந்ததாக சொல்லப்படுகிறது. இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

    நாளை வாக்கு எண்ணிக்கை

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகே வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நடந்தது என்ன

    கடந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.

    Advertisement

    இவற்றில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெக அரசின் மக்கள் விரோத போக்கை தட்டி கேட்கிறார்கள். இதனால் தவெகவுக்கான ஆதரவு எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறப்படும் என்ற ஒரு நிலை இருப்பதால் ஆட்சி கவிழக் கூடாது என்பதற்காக தவெக பெரும்பான்மையை பெற வேண்டிய நிலைக்கு சென்றுவிட்டது.

    அதிக போட்டி

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக- தவெக இடையே அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாக்கு எண்ணிக்கை முடிவை வைத்து இனியும் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்களா, நிர்மல் குமார் சொன்னதை போல் அடுத்தடுத்து இடைத்தேர்தல்கள் வரும் என சொன்னது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    Tomorrow by poll 2026 counting starts at 8 am. Who will win in Maduranthagam and Dharapuram seats.