மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு.. யார் யார்?

  • சென்னை: தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இதன்படி மதுராந்தகத்தில் சிபிஎம் சார்பில் சுகந்தி போட்டியிடுகிறார். தாராபுரத்தில் சிபிஐ சார்பில் லட்சுமணன் போட்டியிடுகிறார்.

    Advertisement

    விஜய்யின் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஎம், சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சிகள் 2 தொகுதி இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக, தவெக, அதிமுக, என்டிகே, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 முனை போட்டி நிலவுகிறது.

    Advertisement

    மதுரந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. இதையடுத்து இன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மதுராந்தகத்தில் சிபிஎம் சார்பில் சுகந்தியும் தாராபுரத்தில் சிபிஐ சார்பில் லட்சுமணன் என்பவரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல்

    சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து காலியாக இருந்த அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    Advertisement

    வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ள நிலையில், தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தன.

    கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

    இதன்படி, மதுரந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்தன. சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன. எனினும், காங்கிரஸ், விசிக போல அமைச்சரவையில் இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்தன.

    Advertisement

    இந்த சூழலில்தான், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் ஆதரவு யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தனியாக போட்டியிட இருப்பதாக அறிவித்து இன்று வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. இதன்படி, மதுராந்தகத்தில் சிபிஎம் சார்பில் சுகந்தியும் தாராபுரத்தில் சிபிஐ சார்பில் லட்சுமணனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளராகவும் சுகந்தி உள்ளார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள சுகந்தி 5,702 வாக்குகள் பெற்று இருந்தார். மக்கள் நல கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் சிபிஎம் கட்சி, திருவிக நகர் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியது.

    English Summary

    The Communist parties have announced their candidates for the by-elections in the Dharapuram and Maduranthakam constituencies. Accordingly, Suganthi is contesting from Maduranthakam representing the CPM, while Lakshmanan is contesting from Dharapuram representing the CPI.