மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத கம்யூனிஸ்ட்கள்!

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் ஆளும் தவெக 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் அரசுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இது திணிக்கப்பட்ட தேர்தல், தவெக குதிரை பேரம் செய்கிறது என்று குற்றச்சாட்டு தெரிவித்த தனியாக களமிறங்கினாலும் பெரிய அளவில் அந்த கட்சியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தேர்தல் முடிவு காட்டுகின்றது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி மதுராந்தகத்தில் தவெக 58,133 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. திமுக 41,531 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக 35,951 வாக்குகள் பெற்று 3-ஆம் இடமும் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 1,134 வாக்குகள் பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி 972 வாக்குகள் பெற்றது.

    Advertisement

    அதே போல தாராபுரத்தில் 20 வது சுற்று முடிவுகளில் தவெக 40,078 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் திமுக ( 50,075 வாக்குகளும்), அதிமுக 38,760 வாக்குகள் பெற்று 3-ஆம் இடத்திலும் உள்ளன. நாம் தமிழர் 4,787 வாக்குகள் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1,065 வாக்குகள் பெற்றுள்ளது.

    நொந்து போச்சா திமுக? அதிமுக, கம்யூனிஸ்ட் ஆபீஸில் காலி சேர்கள்.. டக்னு பனையூர் வந்த பிரபலம் யாருங்க

    இந்த முன்னிலை நிலவரம் 20-வது சுற்று அடிப்படையிலானது மட்டுமே. எனவே முன்னிலை நிலவரங்களில் அடுத்தடுத்த சுற்றுகளில் மாறவும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் தற்போதைய சுற்றுகளின் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது இரண்டு தொகுதிகளிலுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது உறுதியாக தெரிகிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர்.

    Advertisement

    கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரத்தில் லட்சுமணன் என்பவரும், மதுராந்தகத்தில் சுகந்தி என்பவரும் போட்டியிட்டனர். இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் என்பதால் இதில் தனித்து களம் இறங்குவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியிருந்தன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக மீது தேர்தல் பிரசாரத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

    வெறும் காகித புலிகள்.. தாராபுரம், மதுராந்தகத்தில் 1000 வாக்கு பெறவே திணறும் கம்யூனிஸ்ட் கட்சிகள்

    தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை. வெளிப்படைத்தன்மை இல்லை என்று கடுகையான குற்றசாட்டுகளை கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்து இருந்தனர். ஆனாலும் இது இடைத்தேர்தல் களத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்குகளை கவர முடியவில்லை என்பதே தற்போதைய முன்னணி நிலவரங்கள் காட்டுகின்றன.

    Advertisement

    கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரளவு கணிசமான வாக்குகளை பெற்றால் அது ஆளும் தவெகவிற்கு பின்னடைவாக மாறக்கூடும், சொல்லப்போனால் தவெகவின் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் கம்யூனிஸ்ட்கள் இருக்கும் என பேசப்பட்ட நிலையில் மிக குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது. டெப்பாசிட் கூட கிடைக்காது என்பதே தற்போதைய நிலவரம் காட்டுகிறது.

    English Summary

    CPM, CPI Communists fail to make any impact: The ruling TVK has taken a lead of 10,000 votes in both the Maduranthakam and Dharapuram constituencies. Although the Communist parties—which had supported the ruling government's formation—contested independently after alleging that this was an imposed election and accusing TVK of horse-trading, the election results indicate that they failed to make any significant impact.