இன்று மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் எப்படி வாக்களிப்பது?

  • சென்னை: மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று (6 ஆம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமி​ழ​கத்​தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் ​தொகு​தி​களில் இடைத்​தேர்​தலுக்​கான அறி​விப்​பை கடந்த செப்​டம்​பர் 7 ஆம் தேதி தேர்​தல் ஆணையம் வெளி​யிட்​டது. வேட்​புமனு தாக்​கல் செப்​டம்பர் 9-ல் தொடங்கி 16 ஆம் தேதி​யுடன் முடிவடைந்​தது.

    Advertisement

    வாக்காளர்கள் எண்ணிக்கை

    மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை மொத்த வாக்காளர்கள்: 2,13,689. ஆண் வாக்காளர்கள் 1,04,886, பெண் வாக்காளர்கள் 1,08,738, மூன்றாம் பாலினத்தவர் தோராயமாக 65 பேர் உள்ளனர்.

    தாராபுரம் தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 285 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 13 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    வேட்பாளர்கள்

    மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் ​(தவெக), பரந்​தாமன் (தி​முக), கணிதா சம்​பத் ​(அ​தி​முக), சுகந்தி (மார்க்​சிஸ்ட்), ஜானகி​ரா​மன் (நாம் தமி​ழர் கட்சி) மற்​றும் சுயேட்​சை​கள் உட்பட 27 பேர் களத்​தில் உள்ளனர். அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பா​மா (தவெக), சுகன்​யா (​தி​முக), பானு​ம​தி (அ​தி​முக), லட்​சுமணன் (சிபிஐ), கார்த்​தி​கா (​நாதக) உட்பட 22 பேர் போட்​டி​யிடு​கின்றனர்.

    Advertisement

    அனல் பறந்த பிரச்சாரம்

    தவெக வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் விஜய் மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களில் தலா 2 நாட்​கள் பிரச்​சா​ரம் செய்​தார். திமுக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி உள்​ளிட்​டோரும், அதி​முக வேட்​பாளர்​களை ஆதரித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி​யும் தீவிர பிரச்​சா​ரம் மேற்கொண்டனர்.

    இடதுசாரி வேட்​பாளர்​களுக்கு வாக்கு கேட்டு அக்​கட்​சி​களின் நிர்​வாகி​களும், நாம் தமி​ழர் கட்​சி​யின் வேட்​பாளர்​களுக்​காக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் இரு தொகு​தி​களி​லும் தீவிர பிரச்​சா​ரம் செய்​தனர். இந்த தேர்​தலில் தவெக, திமுக, அதி​முக, நாதக, இடதுசாரிகள் என 5 முனை போட்டி நில​வு​கிறது. இரு தொகு​தி​களி​லும் தேர்​தல் பிரச்​சா​ரம் அக்​டோபர் 4-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது.

    Advertisement

    இன்று வாக்குப்பதிவு

    இதையடுத்து இடைத்​தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு இன்​று (6 ஆம் தேதி) நடை​பெறுகிறது. இதை​யொட்டி இரு தொகு​தி​கள் முழு​வதும் துணை ராணுவத்​தின் பாது​காப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்பட்டு பலத்த கண்​காணிப்பு ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. தொகு​தி​களில் உள்ள வெளி​யாட்​கள் முழு​வது​மாக அங்​கிருந்து வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளனர்.

    இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகு​தி​களி​லும் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடி மையங்​களில் பதற்​ற​மான​வை​களாக கண்​டறியப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் போலீ​சார் மற்​றும் தேர்​தல் பறக்​கும் படை​யினர் பாது​காப்பு பணிக்கு நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

    தேர்தல் பணிகள்

    2 தொகு​தி​களி​லும் பாது​காப்பு அறை​யில் வைக்​கப்​பட்​டிருந்த மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் நேற்று வேட்​பாளர்​களின் பெயர் மற்​றும் சின்​னங்​கள் அடங்​கிய தாள்​கள் பொருத்​தப்​பட்டு சரி​பார்க்​கப்​பட்​டன. தொடர்ந்து வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மற்​றும் தேர்​தல் உபகரணங்​கள், வாக்​குச்​சாவடி மையங்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

    Advertisement

    மது​ராந்​தகம் தொகு​தி​யில் 285 வாக்​குச்​சாவடி மையங்​கள் உள்​ளன. இதில், படாளம், மேல​வலம் உட்​பட60 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மான​வை​யாக கண்​டறியப்​பட்​டுள்​ளன. தாராபுரம் தொகு​தி​யில் மொத்​த​முள்ள 320 வாக்​குச்​சாவடிகளில் 18 பதற்​ற​மான​வை​யாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. அவற்​றில் கூடு​தல் பாது​காப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

    வாக்குப்பதிவு

    இருதொகு​தி​களி​லும் தேர்​தல் நடத்தை விதி​கள் மற்​றும் பணப்​பட்​டு​வா​டாவை கண்​காணிக்க பறக்​கும் படைகள், நிலை​யான கண்​காணிப்​புக் குழுக்​கள் மற்​றும் வீடியோ கண்​காணிப்​புக் குழுக்​கள் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளன. இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடை​பெற உள்​ளது. வாக்​குப்​ப​திவுக்கு முன்​பாக கட்​சி​களின் முகவர்​கள் முன்​னிலை​யில் மாதிரி வாக்​குப்​ப​திவு நடத்​தப்​படும். வாக்​காளர்​கள் அரசு ஆவணங்​களு​டன் வாக்​களிக்​கலாம்.

    Advertisement

    வாக்​குப்​ப​திவை முன்​னிட்டு மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்​குட்​பட்ட பகு​தி​களில் இன்று பொது விடு​முறை வழங்​கப்​பட்​டுள்​ளது. பள்ளிகளில் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்​ணிக்கை வரும் 9-ம் தேதி நடை​பெறவுள்​ளது.

    எந்​தெந்த ஆவணங்​களை பயன்​படுத்தி வாக்​களிக்​கலாம்?

    வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் கார்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், பணியாளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    English Summary

    Polling for the by elections in the Maduranthakam and Dharapuram constituencies is scheduled to take place today (the 6th) from 7 AM to 6 PM. The Election Commission has announced that voters who do not possess a voter ID card may cast their votes using any of 12 other specified documents.