சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது வாக்களிக்க இளைஞர்கள், இளம் பெண்களிடம் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் நேற்று நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. பலர் கல்வி மற்றும் வேலைக்காக வெளியூர்களில் உள்ளனர். அவர்களில் பெரும் பாலானோர் வாக்களிக்க வரவில்லை எனக் கூறப்படுகிறது.
வாக்குச்சாவடிகள் முன்பு பெரும்பாலும் நடுத்தர வயதினரும், முதியவர்களுமே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஒரு சிலர் மட்டுமே வரிசையில் நின்றிருந்ததை காணமுடிந்தது.
தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில், வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 வணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவு பெற்றதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மதுராந்தகம் தொகுதியில் தொகுதி வாக்கு எண்ணும் மையமான ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கி ணைந்த பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதே போன்று தாராபுரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஸ்ட்ராங் ரூமில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த பொதுத்தேர்தலை விட 7.1 சதவீதம் குறைவு ஆகும். தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளை விட 9.61 சதவீதம் குறைவு ஆகும். பொதுத்தேர்தலைவிட இரு தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது வாக்களிக்க இளைஞர்கள், இளம் பெண்களிடம் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் மதுராந்தகம் தொகுதியில் நேற்று நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. வாக்குச்சாவடிகள் முன்பு பெரும்பாலும் நடுத்தர வயதினரும், முதியவர்களுமே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஒரு சிலர் மட்டுமே வரிசையில் நின்றிருந்ததை காணமுடிந்தது. பலர் கல்வி மற்றும் வேலைக்காக வெளியூர்களில் உள்ளனர். அவர்களில் பெரும் பாலானோர் வாக்களிக்க வரவில்லை எனக் கூறப்படுகிறது. இளைஞர்கள், இளம்பெண்கள் வாக்கு சதவீதம் குறைந்து இருப்பதால் இந்த தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத சூழலே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆளும் தவெகவிற்கு கடந்த முறை இளம் தலைமுறையினர் பெரிய எண்ணிக்கையில் வாக்களித்தனர். எனவே தற்போது இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது குறைந்து இருப்பது தவெகவினருக்கு சற்று அதிர்சியை கொடுத்துள்ளது. எனினும், இரு தொகுதிகளிலுமே பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளதால் பெண் வாக்காளர்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. தவெக மீது பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள், தற்போது ஏமாற்றத்தை சந்தித்து வருவதாக கூறுவதால், இந்த அதிருப்தி வாக்குகளை சரியாக அறுவடை செய்து வெற்றியை கைப்பற்ற போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதேநேரத்தில் விஜய் அலை இன்னும் ஓயவில்லை என்பதை நிரூபிக்க இடைத்தேர்தல் முடிவு ஒரு அளவுகோலாக இருக்கும் என்பதால் தவெகவும் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்கான விடை வரும் 9 ஆம் தேதி பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.வாக்கு சதவீதம் குறைந்தது!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி திமுகவுத்தான்.. போர் முரசு கொட்டிய துரைமுருகன்!
ஆர்வம் காட்டாத இளம்பெண்கள், இளைஞர்கள்
தவெகவுக்கு அதிர்ச்சி
மரகதம் குமரவேல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்.. வேலையை காட்டிய காங்கிரஸ்.. கடுப்பில் தவெக
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
தாராபுரத்தில் ஃபுல் போதையில் வாக்குச்சாவடிக்கு வந்து அலப்பறை.. மதுப்பிரியரை விரட்டிவிட்ட போலீசார்!