சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் குதிரை பேர விவகாரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளதால் ஆதவ் அர்ஜூனா பதறிப் போயுள்ளதாக திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்குப் பதிவுகளை காலை முதல் ஒவ்வொரு வாக்கு மையத்திற்கும் சென்று மக்கள் வாக்களிப்பதை பார்த்து வருகிறேன். மக்கள் முக மலர்ச்சியோடு எனக்கு வரவேற்பளித்தனர். நல்ல முடிவு எடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். திமுகவுக்கு நல்ல செய்தியை சொல்ல காத்திருக்கின்றனர் என்பது இதன் மூலமாகத் தெரிகிறது.
குற்றச்சாட்டுகள் சொல்வது அரசியலில் மிகவும் சாதாரணமான விஷயம். அது சட்டப்படி தவறு என்றால் தவெகவினர் வழக்குப் போடட்டும். நான் அதனை சந்தித்துக் கொள்கிறேன். சட்டத்திற்கு உட்பட்டே நான் நடந்திருக்கிறேன். முறையாக செய்யக்கூடிய விஷயங்களைத் தான் செய்திருக்கிறேன். தவெகவின் குதிரை பேரத்தை வெட்ட வெளிச்சமாக காட்டியதால் பதறிப் போயிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. அந்த பயத்தில் தான் ஆதவ் அர்ஜூனா தற்போது சென்று புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகார் ஒரு உப்பு சப்பில்லாத புகார். அந்த புகாரை ஒருவேளை அவர்கள் நீதிமன்றத்திற்கு அவர் கொண்டு சென்றாலும், அதனை சந்திப்பதற்கு திமுக தயாராக உள்ளது. மக்கள் தான் எஜமானார்கள். நான் சந்திக்கக்கூடிய இடத்தில் பொதுமக்கள் முக மலர்ச்சியுடன் இருக்கின்றனர். சந்தோஷமாக செல்லுங்கள் என்று என்னிடம் கூறியுள்ளனர். இந்த தேர்தல் பழைய திமுக வரலாற்றை புதுப்பிக்கும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது திமுக வெற்றி பெற்ற வரலாறு எல்லாம் இருக்கிறது. மீண்டும் அந்த வரலாற்றை திமுக படைக்கும். நான் சென்ற இடங்களில் எல்லாம் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. ஏதேனும் புகார் இருந்தால் எங்களுடைய கவனத்திற்கும், அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, வரும் 9 ஆம் தேதி ராஜினாமா கடிதத்தை ரெடியாக வைத்துக் கொள்ள சொல்லுங்கள் என்று பதிலளித்தார். மாலை 5 மணிக்கு மேல் மட்டுமே வாக்குப் பதிவு குறித்த நிலவரங்களை சொல்ல முடியும். களத்தில் நிற்கும் அனைவருமே போட்டியாளர்கள் தான். வெற்றி பெறக்கூடிய நிலையில் இருக்கும் கட்சிகளில் அரசியல் கட்சிகள் பிரதானமாக இருக்கும். இந்த தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னமே வெற்றி பெறும். இப்போது வரைக்கும் வாக்குப் பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இயந்திரப் பிரச்சனைகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் சொல்லப்பட்டுள்ளது. எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய அளவுக்கு குற்றம் சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை என்று கூறினார்.பதறிப்போன ஆதவ்
“ஸ்டாலின் ஏதோ சூப்பர்ஸ்டார் போல் இருப்பதாக நினைத்து மற்றவர்களை உருவ கேலி செய்கிறார்” - ஆதவ் அர்ஜுனா
9 ஆம் தேதி தயாரா இருங்க..