மகளிர் உரிமைத் தொகை.. பணம் வரலையா? ரேஷன் முதல் e-KYC வரை இந்த 5 விஷயம் ரொம்ப முக்கியம்

  • சென்னை: மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்கள், அடுத்த தவணை எப்போது வரும் என்பதோடு இன்னும் சில முக்கிய விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.. வங்கிக் கணக்கில் பணம் வரவில்லையென்றால் என்ன செய்வது, என்னென்ன ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும், ரேஷன் கார்டில் என்ன செய்ய வேண்டும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எங்கே மேல்முறையீடு செய்வது என நிறைய கேள்விகள் இருக்கின்றன..

    Advertisement

    குறிப்பாக சோஷியல் மீடியாவில் ரூ.1,000 உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டதாக தகவல்கள் பரவி வருவதால், அடுத்த தவணையில் எவ்வளவு பணம் வரும் என்ற எதிர்பார்ப்பும் பெண்களிடம் இருக்கிறது. ஆனால் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்போதைக்கு வழக்கம்போல் மாதம் ரூ.1000 தான் வழங்கப்பட்டு வருகிறது..

    Advertisement

    மகளிர் உரிமைத் தொகை

    மகளிர் உரிமைத் தொகை வழக்கமாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட காலகட்டத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை அக்டோபர் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும்போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தேவைப்படும். குடும்ப அட்டையில் விண்ணப்பதாரர் குடும்பத் தலைவியாக இருப்பது முக்கியம்.

    உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால், வங்கி கணக்கு விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். அதேபோல் ஆண்டு மின் பயன்பாடு தொடர்பான தகவல்களை சரிபார்க்க மின் கட்டண ரசீதும் கேட்கப்படலாம்.

    Advertisement

    யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

    21 வயது நிரம்பிய பெண்கள், அரசு நிர்ணயித்த தகுதிகளை பூர்த்தி செய்திருந்தால் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

    மேலும் 5 ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் குறைவான புன்செய் நிலம் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தியிருக்க வேண்டும். நான்கு சக்கர கார் வைத்திருக்கக் கூடாது என்பதும் முக்கியமான தகுதிகளில் ஒன்று. இதுபோன்ற அரசு விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்..

    பணம் வராவிட்டால்?

    இதுதான் ஏற்கனவே உரிமைத் தொகை வாங்கும் பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.. முதலில் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு சரியாக இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

    Advertisement

    அடுத்து உரிமைத் தொகை வரும் வங்கி கணக்கு செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் அல்லது செயலிழந்த வங்கி கணக்கில் பணம் வருவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே அந்த கணக்கை அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது.

    துவரம் பருப்பு குறைந்த விலையில் கொள்முதல் என்றால், ரேஷன் பாமாயில் மட்டும் அதிகம் ஏன்.. திமுக கேள்வி

    விண்ணப்பத்துடன் தொடர்புடைய செல்போன் நம்பரும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை பழைய செல்போன் நம்பர் பயன்படுத்தாமல் போயிருந்தால் அல்லது நம்பர் மாறியிருந்தால், அதை புதுப்பித்துக் கொள்வது நல்லது.. அதேபோல வங்கி கணக்கில் ஏதேனும் மாற்றம் செய்திருந்தால், புதிய கணக்கு விவரங்கள் முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் புதிய வங்கி கணக்கு விவரங்கள் முறையாக இணைக்கப்படவில்லை என்றால், பணம் வருவதில் சிக்கல் ஏற்படலாம்.

    Advertisement

    ரேஷன் e-KYC முடிச்சிருங்க

    ரேஷன் கார்டு தொடர்பான e-KYC பணிகளும் முக்கியம். கைரேகை பதிவு, குடும்ப உறுப்பினர்களின் விவர சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்திருக்க வேண்டும். e-KYC முடிக்காமல் இருந்தால் விவரங்கள் சரிபார்ப்பு நிலையில் இருக்கலாம்.

    ரேஷன் கடைகளுக்கான பாமாயில் கொள்முதலில் ரூ 600 கோடி ஊழல்? துவரம் பருப்பு குறித்தும் உதயநிதி கருத்து

    அதேபோல் தொடர்ந்து 6 மாதங்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் குடும்பங்களின் விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். எனவே தகுதியுள்ள குடும்பங்கள் மாதந்தோறும் ரேஷன் பொருட்களை வாங்குவது நல்லது.

    ரேஷன் அட்டை, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் பெயர் அல்லது குடும்ப விவரங்களில் வித்தியாசம் இருந்தால் அதையும் சரிசெய்து வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக குடும்பத் தலைவி தொடர்பான விவரங்கள் ரேஷன் அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களில் சரியாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்..

    Advertisement

    தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். அந்த காரணத்தை பார்த்த பிறகு 30 நாட்களுக்குள் ஆர்டிஓ ஆபீஸ் மூலமாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ மேல்முறையீடு செய்யலாம்...!!

    English Summary

    Magalir Urimai Thogai.. Payment Not Received? 5 Things to Check from Ration Card to e-KYC