சென்னை: தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை தமிழகத்தில் மிகவும் உற்சாகத்துடன் பண்டிகைகளில் ஒன்று என்பதால், நவம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 முன்கூட்டியே வரவு வைப்பது குறித்து தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வரவு வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகிறார்கள். இவர்களுகுக் வங்கி கணக்கில் நேரடியாக மாதம் தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வாக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்படுவது வழக்கம். நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கடந்த 15 ஆம் தேதி வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் தீபாவளிக்கு முன்பாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை தமிழகத்தில் மிகவும் உற்சாகத்துடன் பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளிக்கு மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். எனவே நவம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 முன்கூட்டியே வரவு வைப்பது குறித்து தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி செலவுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், 8 ஆம் தேதிக்கு முன்பாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டால், பயனுள்ளதாக இருக்கும் என்று மகளிரும் கூறுகிறார்கள். இதனை பரிசீலித்து அரசு முன்கூட்டியே வழங்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அரசு தீபாவளிக்கு முன்பே உரிமைத்தொகை வழங்க முடிவு செய்தால் மகளிருக்கு 30 நாட்களுக்குள் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சரியாக சொல்வது என்றால், அக்டோபர் மாதத்திற்காக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் மற்றும், நவம்பர் மாதத்திற்காக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் என 20 நாள் இடைவெளியில் 2 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும். எனினும், தீபாவளிக்கு முன்பே ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுமா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே தெரிய வரும். இருந்தாலும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாட ஏதுவாக நவம்பர் 8 க்கு முன்பே உரிமைத்தொகை வரவு வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. தவெக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனால், தவெக ஆட்சி அமைந்ததும் 2,500 கிடைக்கும் என எதிர்பார்த்த மகளிருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முழுமையாக மறுசீரமைக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், முந்தைய ஆட்சியைப் போலவே மாதம் ரூ. 1,000 மகளிர் உரிமைத்தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்று தவெக அரசு தெரிவித்துள்ளது.மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000
தீபாவளிக்கு முன்பே ரூ.1,000
பட்ஜெட்டுக்கு பிறகு தான் மகளிருக்கு ரூ.2,500.. குட்டையை குழப்பும் தவெக.. நிர்மல் குமார் பகீர்
ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவு வைப்பு! சொன்ன வார்த்தையை காப்பாற்றிய முதல்வர் விஜய்