மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா

  • சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.. தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள ஒரு தகவல், மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் கவனத்தையும் ஒரே புள்ளியில் திருப்பியுள்ளது.... அத்துடன் கோடிக்கணக்கான குடும்பத் தலைவிகளும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா?

    Advertisement

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பெண்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

    Advertisement

    கடந்த 2026 சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தவெகவின் தேர்தல் அறிக்கையில் மகளிருக்கான உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்பதுதான் மிக முதன்மையான மற்றும் பிரதான வாக்குறுதியாக முன்வைக்கப்பட்டது.

    மகளிர் உரிமைத் தொகை

    தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதலமைச்சராக விஜய் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட உடனேயே, இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைகள் அதிகாரிகளுடன் தீவிரமாக நடத்தப்பட்டன.

    இருந்தாலும் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற உடனடியாக, முழுத் தொகையான 2,500 ரூபாயையும் வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்களும், நிதிநிலை சார்ந்த சவால்களும் இருந்தன. இதன் காரணமாகவே, கடந்த மே மாதத்திற்கான உரிமைத் தொகை முந்தைய நடைமுறையின்படி 1,000 ரூபாயாகவே தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

    Advertisement

    தவெக அரசு ரூ.25000

    இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் உரிமைத் தொகை ஏன் உயர்த்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து தொடர் விமர்சனங்களும், கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதியை உடனடியாக முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தை முழுமையாக மறுசீரமைக்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

    அதன்படி, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்த 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் தற்போது த.வெ.க. அரசால் முழுமையாக மாற்றியமைக்கப்பட உள்ளதாம்.. அதாவது இந்த திட்டத்திற்கு "மதிப்புமிகு மகளிர் திட்டம்" என்று புதிய பெயரிட விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு தற்போது இறுதி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    Advertisement

    2500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை

    இந்த மறுசீரமைக்கப்பட்ட புதிய திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உரிமைத் தொகை எந்விதமான தொய்வுமின்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்பட உள்ளது.

    தேர்தல் களத்தில் த.வெ.க. அளித்த முதன்மை வாக்குறுதியான, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த தவெக அரசு இப்போது முழுவீச்சில் தீவிரமாகத் தயாராகி வருகிறது.

    அந்தவகையில், தமிழகப் பெண்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகப் பார்க்கப்படும் இந்த ரூ2500 அதிரடித் திட்டம், முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் மாதம் 22ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவிருப்பதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் மற்றும் தவெக தரப்பில் இருந்து நம்பகமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Advertisement

    மதிப்புமிகு மகளிர் திட்டம் எப்போது

    ஜூன் 22 முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த "மதிப்புமிகு மகளிர் திட்டம்" ஒட்டுமொத்த தமிழகப் பெண்கள் மத்தியிலும், குறிப்பாகக் குடும்பத் தலைவிகளிடமும் ஒரு புதிய நம்பிக்கையையும், மிக பலத்த எதிர்பார்ப்பையும் தற்போதே ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

    முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியோடு இந்தத் திட்டத்தின் தொடக்கத்தை இணைத்து அமல்படுத்துவது, அரசியல் ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஏராளமான தாய்மார்கள் மற்றும் பெண்கள் தவெக அரசின் இந்த புதிய அறிவிப்பைத் இப்போதே குஷியுடன் வரவேற்க தொடங்கியுள்ளனர்.. அதேசமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் தமிழக பெண்களிடம் ஏற்பட்டுள்ளது...!!

    English Summary

    Magalir Urimai Thogai Sweet Surprise? When Will Tamil Nadu Government’s ₹2500 Reach Accounts?