Magalir urimai thogai: மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது கிடைக்கும்? விஜய் திட்டம் என்ன? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்

  • சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தலின் போது வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் மாதம் ரூ.1,000 மட்டுமே வரவு வைக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது உயர்த்தி வழங்கப்படும்?, விஜய் திட்டம் என்ன? என்பது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலின் போது, தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டில் தனது தலைமையில் ஆட்சி அமைந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

    Advertisement

    ரூ.2,500 எப்போது வழங்கப்படும்

    சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மே மாதம் தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், 5 மாதங்கள் ஆகியும் வாக்குறுதிப்படி மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படவில்லை. இதனால், மகளிர் உரிமைத்தொகை எப்போது ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக இல்லத்தரசிகள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் இன்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெகதீஷ்வரியிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பினர்.

    Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன்பே மகளிருக்கு ரூ.1,000.. வரவு வைக்க முடிவா? சர்ப்ரைஸ் கொடுக்க தமிழக அரசு திட்டம்?
    Advertisement

    அதற்கு ஜெகதீஸ்வரி கூறியதாவது:- மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் நிறைய வேலைப்பாடுகள் உள்ளன. நிறைய வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இறந்தவர்களின் பட்டியல் எடுத்து அதை சரி செய்வது. நிறைய மக்கள் என்ன கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் என்றால், என்னுடைய அக்கவுண்டிற்கு பணம் வரவில்லை. வேறு அக்கவுண்டிற்கு செல்கிறது. அதை சரி செய்து தாருங்கள் என்று மனுக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.

    முழுமையாக மக்கள் பயனடைய

    அது சம்மந்தமாகவும் பார்த்து வருகிறோம். நிறைய பிரச்சினைகள் உள்ளன. சரிபார்க்க வேண்டிய தேவை உள்ளது. அதை எல்லாம் சரி செய்த பிறகுதான் 2,500 ரூபாய் பற்றிய அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிடுவார். கொடுத்ததற்கு பிறகு எதுவும் குறைகள் இருந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் விஜய் கவனமாக உள்ளார். மக்களின் தேவைகளை அனைத்தும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதுதான் நம்முடைய முதல்வர் அவர்களின் முழு சிந்தனையில் உள்ளது.

    Advertisement
    மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது உயர்த்தப்படும்? அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    தவெக ஆட்சியில் முழுமையாக மக்கள் பயன் அடையும் வேலைகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்யின் ஒரே நல்ல எண்ணத்தில் பணிகள் நடக்கிறது. முதல்வர் விஜய் சொன்ன மாதிரி சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றுவார். பணிகள் முடிந்த பிறகு தான் நாம் உறுதியாக சொல்ல முடியும்.. என்று கூறினார்.

    English Summary

    Magalir urimai thogai: During the election, Vijay, the leader of the TVK (Tamizhaga Vettri Kazhagam), had promised that if his party came to power in Tamil Nadu, the monthly financial assistance for women would be increased to Rs. 2,500. However, with the party now in power, only Rs. 1,000 is being credited each month. During a press interaction, Minister Jagadeeswari addressed questions regarding when this assistance would be raised to Rs. 2,500 and what Vijay’s plan is in this regard.