திமுகவில் மாவட்டச் செயலாளர் தேர்தல் மட்டும் ரத்து? ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு.. பின்னணி என்ன?

  • சென்னை: திமுகவில் சமூக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய மாவட்டச் செயலாளர் தேர்தலை மட்டும் ரத்து செய்ய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூட்டணி கணக்குகள் மாறிவிட்ட சூழலில், ஓபிசி அரசியலை திமுக கையில் எடுத்துள்ளது. இதனால் திமுகவில் மறுசீரமைப்பு என்ற பெயரில் உட்கட்சி பிரச்சனையை அதிகரித்துவிட வேண்டாம் என்று தலைமை கருதுவதாகவும் தெரிகிறது.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக கணிசமான வாக்குகளை கைப்பற்றி 2வது இடத்தை பிடித்தது. அதிமுகவுக்கு சாதகமான தொகுதியில், அக்கட்சியை பின்னுக்கு தள்ளி திமுக 2வது இடம் வந்துள்ளது. அதேபோல் சிறுபான்மை மக்களின் வாக்குகள், அரசு ஊழியர்களின் வாக்குகள், ஓபிசி சமூக மக்களின் வாக்குகளும் திமுகவுக்கு கிடைத்திருக்கிறது.

    Advertisement

    விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் விலகிவிட்டதால், திமுக புதிய கூட்டணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேபோல் திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் தொடங்கி இருக்கின்றன. 70 வயதுக்கு மேலான மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்பட உள்ளது. இதில் 13 சீனியர்கள் தங்களின் பதவியை பறிகொடுக்க இருக்கின்றனர்.

    அதேபோல் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கட்சியின் அத்தனை பொறுப்புகளும் தேர்தல் மூலமாக மட்டுமே நிரப்பப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் மாவட்டச் செயலாளர் தேர்தலை மட்டும் நடத்த வேண்டாம் என்று சீனியர்கள் தொடர்ச்சியாக ஸ்டாலினிடம் வேண்டுகொள் விடுத்து வந்தனர். தற்போது இடைத்தேர்தல் முடிவுகளால் ஸ்டாலின் உற்சாகத்தில் இருக்கிறார்.

    Advertisement
    அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் திமுக ஒரு தீயசக்தி! கொளத்தூர் கொத்து பரோட்டா! வாசகம்! 5 பேர் சஸ்பென்ட்

    இதனால் இடைத்தேர்தலில் திமுக செய்த பணிகளை கூறி, மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மட்டும் தேர்தல் நடத்த வேண்டாம் என்று பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றனர். அப்படி தேர்தல் நடைபெற்றால் சமூக ரீதியிலான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியாது என்று கூறி இருக்கின்றனர்.

    இதனை கேட்டு கொண்ட ஸ்டாலின், தற்போதைக்கு உட்கட்சித் தேர்தல் நடத்த வேண்டாம் என்று எண்ணத்திற்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலினின் இந்த முடிவு உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு சாதகமாக மாறும் என்று பார்க்கப்படுகிறது. இளைஞரணியில் இருந்து பலரையும் உதயநிதி ஸ்டாலின் பொறுப்புக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    English Summary

    Major DMK Restructuring? Stalin Likely to Cancel District Secretary Polls for Better Social Representation