ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மக்களுக்கு குட் நியூஸ்.. விரைந்து வழங்க அரசு உத்தரவு!

  • சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளை விரைவில் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் ரேஷன் அட்டையை விநியோகிக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய விலை அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், பொங்கல் பரிசு, பேரிடர் நிவாரணம் வாங்கவும், ரேஷன் கார்டு அவசியம். இதை, உணவுப்பொருள் வழங்கல் துறை வழங்குகிறது. புதிய தவெக அரசில் உணவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வெங்கடரமணன், சென்னை எழிலகத்தில் உள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடத்தினார்.

    Advertisement

    அப்போது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, பயனாளிகளுக்கு புதிய கார்டுகளை விரைவாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதையும், தரமான பொருட்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளை விரைவில் வழங்குமாறு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தகுதியான அனைவருக்கும் அடுத்த ஓரிரு மாதங்களில் ரேஷன் அட்டையை விநியோகிக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

    அரசு நலத் திட்டங்கள் பெறவும், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வாங்கவும் ரேஷன் கார்டுகள் அவசியம் என்ற நிலையில், ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்துள்ள லட்சக்கணக்கான மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English Summary

    TN Government has issued an order to expedite the issuance of approximately 400,000 pending ration cards across Tamil Nadu. Instructions have been issued to complete the distribution of these ration cards within the next one or two months.