மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த விக்கெட்? ஆகஸ்ட் 10 ஆட்டம் ஆரம்பம்! கமல்ஹாசனுக்கு ஷாக் தரும் தூண்?

  • சென்னை: கமல்ஹாசன் கட்சியிலும் பரபரப்பு வந்துவிட்டது. தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களும் அதிர்வுகளும் ஏற்பட்டு வருகிறது.. அந்தவகையில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது... அந்த கட்சியிலிருந்தும் முக்கிய பிரமுகர் வெளியேற போகிறாராம்.. இதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

    Advertisement

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுகிறார் கவிஞர் சினேகன். தமிழ்த்திரைப்பட பாடலாசிரியரும், நடிகரும், கவிஞருமான சினேகன், நேரடி அரசியலில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

    Advertisement


    கமல்ஹாசனின் மநீம

    நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் மய்யம் தனித்து போட்டியிட்டபோது அக்கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டார் சினேகன். ஆனால், தோற்றுப்போனார்... திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி வைத்தபோதும் சரி, ஒரு எம்.பி.சீட்டுக்காக தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தபோதும் சரி, அதில் உடன்பாடில்லாமல் தனது எதிர்க்கருத்தை கமலிடமே பதிவு செய்தவர் சினேகன்.

    இந்த நிலையில், இப்போது மய்யத்திலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளாராம். இப்படியொரு தகவல் கசிந்ததுமே, இதுகுறித்து நாம் மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் இருவரிடம் விசாரித்தோம்.

    அவர்கள் நம்மிடம் பேசும்போது, "திமுக ஆதரவில் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.யானதற்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் தலைவர். இது பலருக்கும் ஆதங்கம் தான். இனி கட்சி பழையபடி வேகமெடுக்குமா? என தெரியவில்லை.

    Advertisement

    சினேகன் கட்சி தாவல்?

    இத்தகைய ஆதங்கத்தில் இருக்கும் சினேகன், இது குறித்து கமலிடமே விவாதித்திருக்கிறார். அதற்கு கமல், இப்போதைக்கு எந்த பொதுத் தேர்தலும் இல்லை. தேர்தல் காலத்தில் கட்சியின் வளர்ச்சியை பற்றி விவாதிப்போம். இப்போது என்ன அவசரம்? நாட்டில் நடக்கும் அரசியலை உற்று கவனித்து அதற்கு தேவையான ரியாக்‌ஷனை தந்தால் போதுமே ? அதனால், அமைதியாக நடப்பதை கவனியுங்கள்" என்றார் கமல்.

    இந்த பேச்சில் சினேகன் உட்பட பலருக்கும் உடன்பாடில்லை.. மய்யத்தில் இருந்தால் தங்களுக்கான அரசியல் எதுவும் இல்லாமல் போகுமோ என்கிற உணர்வில், மய்யத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளனர். எந்த கட்சிக்கு போவது என்பதில் குழப்பம் இருப்பதால், அதில் மட்டும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், தவெகவில் இணையும் எண்ணம் சினேகனுக்கு இல்லை. அது மட்டும் உறுதி. ஆகஸ்ட் 10-தேதிக்குள் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக சினேகன் அறிவிப்பார் என எங்களுக்குத் தெரிகிறது'' என்று நம்மிடம் விவரித்தனர்.

    Advertisement

    மய்யத்துக்கு பின்னடைவு?

    ஒருவேளை இந்த தகவல், உண்மையாகும்பட்சத்தில் மக்கள் நீதி மய்யத்துக்கு இன்னும் சறுக்கலாகவே அமையும்.. சினேகன் போன்ற ஆரம்பகாலத் தூண்கள், களப்பணியாளர்கள் அடுத்தடுத்து வெளியேறுவதாலும் மக்கள் நீதி மய்யம் மிகப்பெரிய பின்னடைவையும் சந்திக்கும்.

    ஒரு கட்சித் தலைவராக தன் சொந்த எம்பி பதவியோடு திருப்தி அடைந்துவிட்டு, தொண்டர்களின் எதிர்காலத்தையும் கட்சியின் வளர்ச்சியையும் தேர்தல் நேரத்து வியாபாரமாக மட்டுமே கமல் பார்ப்பதாக இருந்தால், அது களத்தில் உழைக்கும் நிர்வாகிகளுக்குப் பலத்த ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் தந்துவிடும்.

    இதுதான் மாற்று அரசியல்?

    ஆரம்பம் முதலே "மாற்று அரசியல்" என்ற முழக்கத்தோடு வந்த கட்சி, இன்று ஒரு திராவிடக் கட்சியின் தயவில் இயங்கும் நிலைக்கு சென்றுவிட்டதும், எதிர்கால பாதை குறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லாததும் மநீம-வின் அடித்தளத்தையே ஆட்டம் காண செய்துவிடும்.. இதேநிலை நீடித்தால், தேர்தல் காலத்தில் மட்டும் தற்காலிகமாக உயிர்பெறும் ஒரு பெயரளவு அமைப்பாகவோ அல்லது முற்றிலுமாக முகவரி இழந்து வரலாற்றின் பக்கங்களில் மறைந்துபோகும் ஒரு கட்சியாகவோ மட்டுமே மக்கள் நீதி மய்யம் எஞ்சியிருக்கும்... கமல் என்ன முடிவெடுக்க போகிறார்?? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    Advertisement

    - நமது சிறப்பு நிருபர்

    English Summary

    Makkal Needhi Maiam Next Exit? Kamal Haasan's Early Pillar May Quit Party, Big Announcement Expected Before August 10