சென்னையில் விஜய்யுடன் ஏன் சந்திப்பு நடக்கவில்லை.. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் விளக்கம்

  • சென்னை: சென்னையில் முதல்வர் விஜய்யை ஏன் சந்திக்கவில்லை என்பதற்கு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் அளித்த பதிலில், "எனது பயணத்தில் சென்னை வருகையை சேர்க்க நான் எடுத்த நல்லெண்ண நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு போதிய அளவில் பதிலளிக்கவில்லை என்று மலேசிய ஊடகங்களில் சில செய்திகள் வெளியானதாக கூறுவது உண்மை அல்ல. விஜய்க்கு ஏற்கனவே வெளிநாடு முதலீடுகள் தொடர்பான முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் வேறு சில நிகழ்ச்சிகள் இருந்தன.

    Advertisement

    இறுதியாக நான் அறிவித்தேன், "பரவாயில்லை. நான் கேரளா மற்றும் மாலத்தீவு பயணத்தைத் தொடர்கிறேன். ஆனால் தமிழ்நாட்டுக்கு வர முடியாது" என்று கூறினேன். அவர் எங்களுடன் மலேசியாவில் இணைவார் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    18வது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது தான் சென்னையில் முதல்வர் விஜய்யை ஏன் சந்திக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அந்த பேட்டியின் போது, முதல்வர் விஜய் குறித்து மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் பேசுகையில், முதல்வர் விஜய்யை வெளிநாட்டு தலைவர்களில் முதலில் வாழ்த்தியவர்களில் நானும் ஒருவர். முதல்வர் விஜய், அரசு நிர்வாகத்தை நன்றாக தொடங்கி உள்ளார். வறுமையை ஒழிப்பது, ஊழலை எதிர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். பலர் டெல்லி அரசியலைவிட தமிழ்நாட்டு அரசியலை அதிகமாகப் பின்பற்றுவதால், முதல்வர் விஜய்யையும் பின்பற்றுகிறார்கள். அரசியலுக்கு வந்த உடனேயே தேர்தலில் வெற்றி பெறுவது பெரிய சாதனை.

    Advertisement

    அதிகாரத்துக்கு வந்த பிறகுதான் உண்மையான சவால் தொடங்குகிறது என்று விஜய்யிடம் கூறினேன். நாம் நினைப்பதைவிட உண்மையான அரசியல் களம் வேறுபட்டதாக இருக்கும். முக்கியமான கொள்கையை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக தவறான சக்திகளுடன் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது. அவர் அரசியலுக்கு புதிதாக வந்தவர். தமிழகத்தை அவர் சிறப்பாக நிர்வகிப்பார் என்று நம்புகிறேன்.

    இதுவரை முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்த எனது மதிப்பீடு பற்றி கேட்டால், கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நல்ல நிர்வாகம் குறித்து அவர் ஒரு புதிய குரலாக இருக்கிறார் என்று பார்க்கிறேன். ஆனால், இது அவ்வளவு எளிதானது அல்ல. சில சக்திகளை கட்டுப்படுத்த வேண்டும். சில விஷயங்களை அவர்கள் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும். இதுவரை அவர் நன்றாக தொடங்கியிருக்கிறார். அதைத்தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும்.

    Advertisement

    வயதானவர்கள் சிலர் பிரிந்து இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் பழைய அரசியல் அமைப்புக்கு பழகிவிட்டார்கள். பழைய முறைக்கு பழகியிருப்பது வேறு. ஆனால், ஊழல் செய்பவர்களுக்கும், நாட்டின் செல்வத்தை வீணாடித்தவர்களுக்கும் பழகிவிடக்கூடாது.

    ஏற்கனவே இருக்கும் அமைப்புக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், கொள்கைகளில் உறுதியாக இருந்தாலும், இது எளிதானது அல்ல. இது ஒரு சவால். இது எளிதாக இருக்கும் என்று நினைத்தால், நீங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது.

    மலேசியாவில் உள்ள இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அவர்கள் தமிழ்நாட்டு அரசியலை நெருக்கமாகப் பின்பற்றுகிறார்கள். அவர்களில் பலருக்கு முதல்வர் விஜய் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் உள்ளது. அவருடைய உறுதியான செயல்பாடுகளுடன், அவர் மலேசியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன்" இவ்வாறு தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்து மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் கூறியுள்ளார்.

    English Summary

    Responding to why he did not meet Chief Minister Vijay in Chennai, Malaysian Prime Minister Anwar Ibrahim stated that it is untrue—as reported by some Malaysian media outlets—that the Tamil Nadu government failed to adequately respond to the goodwill gesture he had made by including a visit to Chennai in his itinerary.