சென்னை: வண்ணாரப்பேட்டை 33 வயதாகும் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்திருக்கிறார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் திருவொற்றியூரைச் சேர்ந்த 27 வயதாகும் ஹரிகிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் வழக்கறிஞர் என்று நம்ப வைத்ததுடன், நெருங்கிப் பழகியுள்ளார். மேலும், அப்பெண்ணுக்குத் தெரியாமல் அவரது அந்தரங்கப் படங்களை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதற்கிடையே, உறவினர்கள் நடத்திய பேச்சுவார்த்தையால் அப்பெண் அவரது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இது ஹரிகிருஷ்ணனுக்கு பிடிக்காததால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி 155 பவுன் தங்க நகைகளை வாங்கினாராம்.. ஒரு கட்டத்தில் மேலும் நகைகளை கொடுக்க முடியாது என அப்பெண் தெரிவித்தாராம். ஆத்திரம் அடைந்த அவர் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினாராம்.
இதில் அதிர்ச்சியடைந்த பெண், ஹரிகிருஷ்ணன் குறித்து விசாரித்ததில், அவர் வழக்கறிஞர் இல்லை என்பதும், ஏமாற்றி நகைகளைத் பறித்ததும் தெரிந்துள்ளது. இதையடுத்து, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அதன்பேரில் ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இன்னொரு குற்றம் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைதாகி உள்ளனர். சென்னை தியாகராயநகரில் நடந்த வழிப்பறி கொள்ளை வழக்கில் வக்கீல் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டது குறித்து பார்ப்போம். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் தியாகராயநகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றுள்ளாராம். அப்போது 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், கார்த்திகேயனை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.11 லட்சத்தை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி உள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 4 பேர் கைது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்னர். இதில் பணத்தை கொள்ளையடித்ததாக தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்த ஆனந்த செல்வன் (வயது 39), சூளைமேட்டைச் சேர்ந்த பப்லு (35), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் (29), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது பைசல் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.38 லட்சத்தை மீட்டனர். கார்த்திகேயன் பணம் கொண்டு வருவதை தெரிந்துகொண்டு, இவர்கள் 4 பேரும் வழிமறித்து பணத்தை கொள்ளையடித்ததாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் ஆனந்த செல்வன், பப்லு ஆகியோர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. அருண்குமார் வக்கீலாக உள்ளார். கைதான இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கார்த்திகேயன் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.வழிபறி வழக்கில் வக்கீல் உள்பட நான்கு பேர் கைது