வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்!

  • சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரிய​பாளை​யம் அருகே வீட்​டில் தனி​யாக இருந்த 2 பெண்​களிடம் அத்​து​மீறலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞர், பெண்​களின் உறவினர்​களால் அடித்​துக் கொலை செய்​யப்​பட்டார். இது தொடர்​பாக 3 பேர் கைது செய்​யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    வேலை தேடி சமீபத்​தில் தமிழகம் வந்த அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த பிரசன்​ஜித் தாஸ் (35) உள்​ளிட்ட 6 இளைஞர்​கள், திரு​வள்​ளூர் மாவட்டம், பெரிய​பாளை​யம் அருகே வெள்​ளியூர் கிராமத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலை​யில் பணிபுரிவதற்​காக நேற்று முன்​தினம் வந்​தனர்.

    Advertisement

    இவர்​கள், வெள்​ளியூர் அருகே அமணப்​பாக்​கம் கிராமத்​தில் தங்க வைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், நேற்று முன்தினம் மாலை பிரசன்ஜித் தாஸ் மது அருந்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. ​போதை அதிக​மான​ நிலையில் அவர், அமணப்​பாக்​கம் பகு​தி​யில் சுற்​றித் திரிந்​துள்​ளார்.

    மேலும், அமணப்​பாக்​கம் அரு​கில் உள்ள ராம​ராஜ கண்​டிகை கிராமத்​தில் ஒரு வீட்​டுக்​குள் புகுந்​து, அங்கு தனி​யாக இருந்த இரு பெண்களிடம் அத்​து​மீறலில் ஈடுபட முயன்​றுள்​ளார் பிரசன்ஜித் தாஸ்.

    இதனால் அதிர்ச்​சி​யடைந்த அந்தப் பெண்​கள் கூச்​சலிட்​டதையடுத்​து, பெண்​களின் தந்தை, உறவினர்​கள், பொது​மக்​கள், பிரசன்​ஜித் தாஸை பிடித்​து, கை,​ கால்​களை கட்டி தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது. இதில், படு​காயமடைந்​து, மயங்கி கீழே விழுந்த பிரசன்​ஜித் தாஸ் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

    Advertisement

    இதுகுறித்​து, தகவலறிந்த ஊத்​துக்​கோட்டை துணை காவல் கண்காணிப்​பாளர் ராஜா, வெங்​கல் காவல் ஆய்​வாளர் முரளி மற்​றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்​து, பிரசன்​ஜித் தாஸ் உடலை மீட்​டு, பிரேத பரிசோதனைக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

    இதனைத் தொடர்ந்​து, வழக்​குப் பதிவு செய்த வெங்​கல் போலீ​சார், பிரசன்​ஜித் தாஸ் கொலை செய்​யப்​பட்​டது தொடர்​பாக, இரு பெண்​களின் தந்தை ரவி (55), சித்​தப்பா சிவகு​மார் (45), உறவினர் ஜெயக்​கு​மா ர்​(28) ஆகிய 3 பேரை நேற்​று கைது செய்​தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Near Periyapalayam in the Thiruvallur district, a young man from North India who attempted to molest two women—who were alone at home—was beaten to death by the women's relatives. Three individuals have been arrested in connection with this incident.