சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மாமியாரும் மருமகனும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்ட விசித்திரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. காதலுக்குக் கண்ணில்லை என்று ஒருதரப்பும், சமூக ஒழுக்கச் சீர்கேடு என்று மறுதரப்பும் இணையத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் இந்த வினோத சம்பவத்தின் பின்னணியை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
இந்தியக் குடும்பக் கட்டமைப்பில் மாமியார் மற்றும் மருமகன் இடையேயான உறவுமுறை என்பது தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உன்னதமான பிணைப்பாகவே காலம் காலமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால், இப்போதைய நவீன நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், சமூகத்தின் மரபுகளையும் விழுமியங்களையும் முற்றிலுமாக தலைகீழாக மாற்றும் விசித்திரமான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது அக்பர்பூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே தீர்க்க முடியாத கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன் மற்றும் மனைவி இருவருக்குள்ளும் நாளுக்கு நாள் அதிகரித்த மனக்கசப்பு மற்றும் தினசரி மோதல்கள் காரணமாக, இருவரும் இணைந்து வாழ முடியாத சூழல் ஏற்பட்டு, இறுதியில் அந்தப் பெண் கோபித்துக் கொண்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் தம்பதியினர் இருவரும் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞரை, மகள் சண்டை போட்டுவிட்டு சென்றதும் மருமகனை நேரில் அழைத்து நலம் விசாரிப்பது போல அவரது சொந்த மாமியார் ஆறுதல் சொல்ல தொடங்கியுள்ளார். தன் மகளின் வாழ்க்கை சீரழிவதைத் தடுத்து, கணவன்-மனைவி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அந்த மாமியார், மருமகனுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினார். அத்துடன் நிறுத்தாமல், என் மகள் அப்படித்தான், அவள் ஒரு மூர்க்கக்காரி என்று தன் சொந்த மகளுக்கு எதிரான கருத்துகளையே மருமகனிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார். இத்தகைய மாமியாரின் இனிமையான பேச்சில் முழுமையாக மயங்கிய மருமகன், அவர் சொல்வதற்கெல்லாம் தலையசைக்க தொடங்கினார். ஆரம்பத்தில் ஆறுதலாகவும் ஆதரவாகவும் தொடங்கிய இந்த விபரீத பழக்கம், நாளடைவில் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது. இவர்கள் இருவரும் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்குள் ரகசியமாக உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாகவே எவருக்கும் தெரியாத வகையில் இந்த கள்ளத்தொடர்பு மிகவும் தீவிரமாக நீடித்து வந்துள்ளது. தங்களது இந்த உறவு,அவெளியில் தெரிந்தால் சமூகத்தில் தங்களுக்குப் பெரும் அவமானமும் எதிர்ப்பும் ஏற்படும் என்பதை உணர்ந்த காதலர்களான மாமியாரும் மருமகனும், வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வாழ முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் எந்தத் தகவலும் சொல்லாமல் இருவரும் தங்களது வீட்டை விட்டு திடீரென மாயமாகி விட்டார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், வீட்டை விட்டு ஓடிப்போன இந்த ஜோடி நேராக கான்பூர் நகர் கோர்ட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தது. அங்கு தங்களது வயது சான்றிதழ்கள் மற்றும் பரஸ்பர சம்மத கடிதங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து, சட்டப்பூர்வமாகத் தங்களது பதிவுத் திருமணத்தை நடத்தினார்கள்.. அதுமட்டுமல்ல, திருமணம் முடிந்த கையோடு, நீதிமன்ற வளாகத்திலேயே இருவரும் முறைப்படி மாலைகளை மாற்றிக் கொண்டனர். பிறகு கழுத்தில் தாலியுடன், தங்களது திருமண சான்றிதழைக் கையில் ஏந்தியபடி ஜோடியாக ஒரு வீடியோ எடுத்து, அதை சோஷியல் மீடியாவிலும் வெளியிட்டனர். அந்த வீடியோவில், நாங்கள் 2 பேரும் இருவரும் சட்டப்பூர்வமாக, பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். இந்த சமுதாயம் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், மக்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்து ஆசி வழங்க வேண்டும்" என்றும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பார்த்து புதுமணத் தம்பதியின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நிலைகுலைந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். திருமணச் சடங்குகளை முடித்த கையோடு, இந்த விசித்திர ஜோடி ஹனிமூனுக்கு தங்களுக்கு பிடித்தமான இடத்திற்குச் சென்றுவிட்டதாக உள்ளூர் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த செய்தியும், புதுமண தம்பதி பேசிய வீடியோவும்தான், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், காதலுக்குக் கண்ணில்லை என்பது இதுதானோ, இது கலியுகத்தின் உச்சகட்டம், சமூக ஒழுக்கச் சீர்கேடு என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்கள்..!!உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர்
தம்பதிக்குள் தகராறுமாமியாரை திருமணம் செய்த மருமகன்
மருமகனை மணந்த பெண்
பதிவுத் திருமணம்
ஹனிமூன் கிளம்பிய ஜோடி