விஜய் தலைமையில் ம.ச.வெ.கூட்டணி.. பிரதமர் வேட்பாளர் யார்? மாணிக்கம் தாகூர் சொன்ன தகவல்!

  • சென்னை: "விஜய் தலைமையில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் செயல்படும். கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்கும் நகர்வுகள் தொடங்கும்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, தனிப் பெரும்பான்மை பெறாததால், ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை நாடியது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்கிரஸ் வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்தது.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து, விசிக, ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளும் தவெக கூட்டணியில் இணைந்து ஆதரவு தெரிவித்தன. சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து தங்களது ஆதரவை வழங்கின. இதன் மூலம், தவெக ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபித்தது.

    இதனைத் தொடர்ந்து கூட்டணியை வலுவாக்க தவெக கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தை சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை புறக்கணித்த நிலையில், மற்ற கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில், 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகமான பனையூரில் இன்று நடைபெற்றது.

    Advertisement

    முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி, எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக கூட்டணிக்கான பெயர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்குப் பிறகு தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 அன்று நடந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் அடுத்த கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று கூறினோம். மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டோம். அவரது ஒருங்கிணைப்பில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டணி விஜய் தலைமையில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் செயல்படும். புதிய கட்சிகள் வருவதற்கான அடுத்த நகர்வுகள் தொடங்கப்படும். கூட்டணியின் பெயர் பலமான அர்த்தங்களையும், அஜெண்டாவையும் சொல்கிறது. மதசார்பின்மையையும், சமூக நீதியையும் நிலை நிறுத்தும் கட்சிகளும், தமிழகத்தின் உரிமைக்காக போராடும் கட்சியும் இங்கு உள்ளன. வரும் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்போம்.

    Advertisement

    2029 லோக்சபா தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இந்தியா கூட்டணி லோக்சபா தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது. 2029 தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும், அவருக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வார். தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எங்களின் வேட்பாளரை நாங்கள் எங்கள் வேட்பாளரை சொன்னோம். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் என்பது எனது கருத்து. இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமே இந்தக் கூட்டணி." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Secular Social Justice Victory Alliance led by Vijay, will operate in Tamil Nadu and Puducherry. Moves to induct new parties into the alliance will begin,” stated Tamil Nadu Congress Committee President Manickam Tagore.