கேரளா மாடலை போல்.. திமுகவும் தவெகவும் ஓர் அணியில் இருக்கணும்னு திருமாவளவன் சொல்கிறார்.. மாணிக்கம் தாகூர்

  • சென்னை: திமுகவும் தவெகவும் ஓரணியில் இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்து விமர்சிக்கப்பட்ட நிலையில், மாணிக்கம் தாகூர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். திருமாவளவன் கருத்து தொலைநோக்கு பார்வை என்றும், கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சியும் உள்ளது போன்று, பாஜகவை எதிர்க்க தவெக திமுக ஓரணியில் இருக்க வேண்டும் என கூறியதாக மாணிக்கம் தாகூர் விளக்கியுள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

    Advertisement

    கேரளாவில் உள்ளது போல..

    அண்ணன் திருமாவளவனின் பார்வை என்பது தொலைநோக்கு பார்வை.. அவர் சொல்கிற அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இது இன்னைக்கு நடக்கிற சட்டப்பிரதி பாலிடிக்ஸ் உடன் கனெக்ட் செய்து பார்க்க கூடாது.. சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏக்களுடைய விஷயத்தை பார்த்து கனெக்ட் செய்யக்கூடாது. திருமாவளவன் என்ன சொல்கிறார் என்றால், தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கனும். கேரளா மாடல் மாதிரி..

    கேரளாவில் எப்படி, காங்கிரசும் கம்யூனிஸ்டும் நேர் எதிராக இருக்கிறது.. ஆனால் பாஜக எதிர்ப்பில் ஒரே மாதிரி இருக்கோம். அதே மாதிரி இங்கயும் இருக்க வேண்டும் என நினைக்கிறார். கேரளாவில் உள்ளதை போன்று தமிழகத்தில் இரு கட்சிகளும் இருக்க வேண்டும் என நினைக்கிறார். பெர்சனலா இங்க வந்து திமுகவும் தவெகவும் டிப்பெரென்ஸை கம்மி பண்ணி சேர்ந்த நிற்க வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த வார்த்தையை அவர் கூறவில்லை.

    Advertisement

    அவர் என்ன சொல்கிறார் என்றால், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டும், காங்கிரசும் டெல்லியில் ஒன்றாக ஒரே டேபிளில் உட்கார்ந்து பாஜகவை கொள்கை அளவில் எதிர்ப்பார்கள். அது மாதிரி வேண்டும் என நினைக்கிறார். திருமாவளவன் கருத்து என்பது தொலைநோக்கு கருத்து. தமிழகம் ஒரு பாஜக இல்லாத, ஆர்.எஸ்.எஸ். அதிகாரம் இல்லாத ஒரு மாநிலமாக தமிழகம் தொடரவேண்டும் என்பது தான் அவருடைய கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

    திருமாவளவன் என்ன பேசினார்?

    அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். இந்த அணியில் திமுகவும் இருக்க வேண்டும்.. தவெகவும் இருக்க வேண்டும். கொள்கை எதிரிகள் ஓரணியில் இணைய வேண்டும். தமிழ்நாட்டையோ அல்லது விசிகவையோ மனதில் வைத்து நான் எதுவும் சொல்லவில்லை. என்னுடைய பார்வை முழுவதும் தேசிய அளவிலானது.

    Advertisement

    தமிழகத்தில் திமுக மற்றும் தவெக இடையே அரசியல் ரீதியாக பலத்தப் போட்டிகள், எதிர் நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் தேசிய அளவில் பாஜகவின் மதவாதத்தையும், அரசியலையும் வீழ்த்த கொள்கை எதிரியை வீழ்த்த ஒரே அணியில் தவெகவும் திமுகவும் பயணிக்க வேண்டும்.. என்னுடைய இந்த விருப்பத்தை சொன்னால் திருமாவளவனுக்கு என்ன ஆச்சு என சொல்வார்கள்.. இது அவர்களது புரிதலில் உள்ள சிக்கல். என் பார்வையில் உள்ள சிக்கல் கிடையாது. எனது தேசிய அளவிலான பார்வையை தமிழக அரசியல்வாதிகளால் புரிந்துகொள்ள முடியாது" என்று பேசியிருந்தார்.

    English Summary

    Manickam Tagore: Tamil Nadu Congress President Manickam Tagore has clarified VCK leader Thirumavalavan's remarks on a possible TVK-DMK alliance against the BJP, stating that alliance decisions will be taken by the party leadership at the appropriate time.