ஜோசியர்கள் சொல்வதை பெரிதாக்க வேண்டாம்” - விஜய் பிரதமர் ஆவார் என்ற குரலுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

  • சென்னை: பிரதமராக விஜய்யை ராகுல் காந்தி அமர வைப்பார் என தவெக எம்.எல்.ஏ கனிமொழி பேசியது குறித்த கேள்விக்கு, "ஜோதிடர்கள் சொல்வதை எல்லாம் பெரிதாக்கி விடுகிறார்கள். என்ன பிரச்சனையை தீர்ப்பதற்கு விஜய் வந்தாரோ, அதை செய்ய விடாமல் திசைதிருப்புகிறார்கள்." என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் பிக்பாஸ் போல் இருப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதற்கு மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.

    Advertisement

    செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "என்டர்டெயின்மென்ட் துறையில் இருந்து வந்ததால் சீமான் பொழுதுபோக்காக பார்க்கிறார். அண்ணன் சீமான் எல்லாவற்றையும் குறை சொல்ல பிறந்தவர். முதல்முறையாக சட்டமன்றம் நேரலை செய்யப்படுகிறது. அதை வரவேற்க வேண்டும்.

    தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக தொடந்து தவறுகளைச் செய்கிறார். அண்ணன் சீமான் எல்லாவற்றையும் குறையாகப் பார்க்கிறார். எண்டர்டெயின்மென்ட் துறையில் இருந்து வந்ததால் பொழுதுபோக்காகப் பார்க்கிறார்.

    ரீல்ஸை கேவலமாக நினைக்கக்கூடாது. ஊடகத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் ரீல்ஸ். நாடகங்கள், சினிமாக்கள் இருந்தன. விடிய விடிய கட்சிக் கூட்டங்கள் நடந்தன, அந்த காலம் முடிந்துவிட்டது. ஒரு விஷயத்தை 30 நொடிகளுக்குள் சுருக்கமாக சொல்லும் பழக்கத்தை ரீல்ஸ் கற்றுக் கொடுக்கிறது. ரீல்ஸாக வருவதற்காக சில விஷயங்கள் நடக்கின்றன. இதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்." என்றார்.

    Advertisement

    அதைத்தொடர்ந்து, 2026ல் முதலமைச்சர் இருக்கையில் விஜய்யை எப்படி ராகுல் காந்தி அமர வைத்தாரோ, அதேபோல, 2029ல் பிரதமர் நாற்காலியில் விஜய் கைபிடித்து அமர வைப்பார் ராகுல் காந்தி என தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர், "விஜய்க்கு கிடைத்தது மாற்றத்திற்கான வாக்குகள். 2 கழகங்களின் ஊழல் காரணமாக மக்கள், விஜய்க்கு வாக்களித்தனர். 108 சட்டமன்ற இடங்களில் தவெக வென்றது. நேர்மையான ஆட்சி தமிழ்நாட்டில் வரவேண்டும், பாஜக உள்ளே வரக்கூடாது என ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார்.

    Advertisement

    100 நாட்களில் தவெக அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். ஊழலை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். யார் யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ அவர்கள் எல்லாம் இணைந்து கதை கட்டி விடுகிறார்கள்.

    என்ன பிரச்சனையை தீர்ப்பதற்கு விஜய் வந்தாரோ, அதை செய்ய விடாமல் திசைதிருப்புகிறார்கள். ஜோதிடர்கள் சொல்வதை எல்லாம் பெரிதாக்கி விடுகிறார்கள். ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். முதலமைச்சராக விஜய் தொடர வேண்டும். நல்லாட்சி தர வேண்டும்" என்றார்.

    English Summary

    Responding to a question about TVK MLA Kanimozhi’s statement that Rahul Gandhi would install Vijay as Prime Minister, Congress leader Manickam Tagore said, "People blow out of proportion what astrologers say. They are distracting Vijay from addressing the very issues he set out to resolve."