தொகுதி மறுவரையறை 2 மணி நேர கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?.. மாணிக்கம் தாகூர் விளக்கம்

  • சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக ஒரு பொது பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. தேசிய அரசியலை நோக்கி தவெக வைத்துள்ள நகர்வு பேசு பொருளாகியுள்ளது. விஜய் ஏன் இந்த கூட்டத்தை நடத்தினார். 2 மணி நேரம் நடந்த கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து மாணிக்கம் தாகூர் விளக்கமாக கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாமக எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், விருதுநகர் எம்பியுமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. ஏப்ரல் 16 ஆம் தேதி தொகுதி மறுவரையறை மசோதா நிராகரிக்கப்பட்டது. அதேபோல இந்தமுறையும் தொகுதி மறுவரை மசோதா நிராகரிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுடன் இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்.

    Advertisement

    பாஜக ஏமாற்று வேலை

    பாஜக பல ஏமாற்று வேலைகைள செய்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கையை கூட்டுவோம் என்று ஆபர் காட்டி மோசடி செய்ய முயற்சிக்கிறது. வரலாற்றில் இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெற்றதில்லை. இந்த கூட்டம் மிகப்பெரிய தொடக்கம். முதலமைச்சர் விஜய்யின் இந்த முயற்சி பெரிய வெற்றியை பெறும். தொகுதி மறுவரையறையில் எந்த நியாயமும் இல்லை. தமிழகத்துக்கு இது எந்த வகையிலும் பயனளிக்காது. தமிழகத்திற்கு ஏமாற்றுவதற்கான வேலை. ஆர்.எஸ்.எஸ், பாஜக இணைந்து சதி செய்கிறது.

    இந்த தொகுதி மறுவரையறையே தமிழத்திற்கு எதிரான சதி. தொகுதிகளை காப்பாற்றுவதற்காக இந்தப்பணி செய்கிறோம். நியாயமான தொகுதி மறுவரையறை என்பதே போலியானது. 543 தொகுதிகள் தான் நியாயமானது. 39 தொகுதிகள் தான் நியாயமானது. போலியை ஆதரிப்பதில் எந்த நியாயமும் இல்லை. மோடியும், அமித்ஷாவும் நமக்கு எப்போதும் நியாயமான தொகுதி வரையறை கொடுக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் நமக்கு எதிரான போலி தொகுதி வரையறையை தான் செய்வார்கள்" என்றார்.

    Advertisement

    சட்டமன்றத்தில் தீர்மானம்

    சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தென் மாநிலங்களில் அதிகார வலிமை, உரிமை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். திமுக ஆட்சியில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டப்பட்டது. அதில் தொகுதி மறுவரைறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று நிராகரிக்கப்பட்டதை இப்போது நிறைவேற்ற துடிக்கிறார்கள். தொகுதி மறுவரையறையே தமிழகத்திற்கு முற்றிலும் எதிரானது. முந்தைய தொகுதி மறுவரைறையிலும் தமிழகத்திற்கான தொகுதி குறைக்கப்பட்டது. இந்தமுறை அதை அனுமதிக்க மாட்டோம். அனைத்து கட்சிகளும் ஒற்றை குரலாக ஒலிப்போம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

    English Summary

    Manickam Tagore has provided a detailed explanation regarding why Vijay convened this An all party meeting and what was discussed during the two-hour session.