25 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் கொடுக்காத தேர்தல்.. விஜய்க்கு பாராட்டு மழை பொழிந்த மாணிக்கம் தாகூர்

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் மக்களின் பேராதரவோடு அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 25 ஆண்டுக்களுக்கு பிறகு ஒரு இடைத் தேர்தலுக்கு பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, இடைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறி மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    தவெகவுக்கு அங்கீகாரம்

    இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் மக்களின் பேராதரவோடு அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    கடந்த 4 மாதங்களாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும். த.வெ.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க. கட்டவிழ்த்துவிட்ட அவதூறு பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

    Advertisement

    பணம் கொடுக்காத தேர்தல்

    இந்த இடைத் தேர்தல் வெற்றி என்பது முதலமைச்சர் தலைமையிலான அரசுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த இரண்டு தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவை தமிழக மக்களின் பிரதிபலிப்பாக கருத வேண்டும்.

    தமிழ்நாட்டில் 25 ஆண்டுக்களுக்கு பிறகு ஒரு இடைத் தேர்தலுக்கு பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, இடைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிற முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu Congress Committee president Manickam Tagore congratulated Chief Minister Vijay after TVK-backed candidates Maragatham Kumaravel and Sathyabama won the Madurantakam and Dharapuram bypolls, describing the results as a major public endorsement and calling it a money-free election.