திமுகவை நொடிப்பொழுதில் திருப்பி அடித்த மாணிக்கம் தாகூர்: உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கிரஸ் நறுக்


  • சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடந்த அதிரடி நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் விரிசல் விழுகிறதா என்ற அச்சத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் விவாதங்கள் வெடித்துள்ளன. உதயநிதி ஸ்டாலினின் காரசாரமான பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கொடுத்த மின்னல் வேக பதிலடி என்ன? இதோ அதுகுறித்த தகவல்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

    Advertisement

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    தேர்தல் முடிவுகள் மற்றும் தோல்விக்கான காரணங்களை ஆராயும் நோக்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    உதயநிதி ஸ்டாலின்

    இந்தக் கூட்டத்தில், கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி தங்களுக்குத் துரோகம் இழைத்ததாகவும், முதுகில் குத்தியதாகவும் குற்றம் சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினார்கள்.. இந்த விவகாரம் தொடர்பான அதிர்வலைகள்தான், இப்போது சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகின்றன.

    Advertisement

    இந்த குற்றச்சாட்டுக்கு தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவின் செயல்பாடுகளை கடுமையாகச் சாடியுள்ளார்.

    முதுகில் குத்திய காங்கிரஸ்

    மாணிக்கம் தாகூர் தனது பதிவில், "தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்திலேயே திமுகவும் அதிமுகவும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பாஜகவுடன் பின்வாசல் அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. ராகுல் காந்தியை விமர்சித்து நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், பாஜக ஆசைப்பட்டபடி விஜய் முதல்வராவதைத் தடுக்கத் தவறியதால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடே தவிர வேறில்லை... சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் திமுகவின் செயல்பாடுகளை சந்தேகத்துடன் பார்க்கின்றன" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    Advertisement

    திமுக இளைஞரணி நிறைவேற்றிய இந்தத் தீர்மானமும், அதற்கு மாணிக்கம் தாகூர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், மதச்சார்பற்ற கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திமுக, கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கையை எந்தளவிற்குத் தக்கவைத்துள்ளது என்பது இப்போது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.

    மாணிக்கம் தாகூர்

    இந்த மோதல் போக்கு தற்காலிகமானதா அல்லது நீண்டகால கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள நிரந்தர விரிசலா என்பது வரும் நாட்களில் அமையும் அரசியல் நகர்வுகளின் மூலமே உறுதியாகும். கூட்டணியில் ஏற்பட்டுள்ள இத்தகைய வெளிப்படையான கருத்து வேறுபாடுகள், வரவிருக்கும் அரசியல் களங்களில் திமுகவின் வியூகங்களை எவ்விதத்தில் மாற்றியமைக்கப்போகிறது என்பது தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இதோ அந்த ட்வீட்

    இதோ மாணிக்கம் தாகூர் தமிழும், ஆங்கிலமும் கலந்து இயல்பாக பதிவிட்ட ட்வீட்டினை பாருங்கள்.. இதைதான் காங்கிரஸ் தொண்டர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்:

    "ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே DMK - ADMK secret talks ஆரம்பிச்சுட்டாங்க. அதையும் ஒரு senior BJP leader facilitate பண்ணினார். இப்போ அது slowly வெளியே வருது. Congress எப்பவும் BJP உடன் compromise ஆகாது. ...

    BJP உடன் underground dealing வைத்துக்கிட்டு வெளியே secular mask போட்டுக்கிறவர்களை நம்ப முடியாது. அதனால்தான் 5ம் தேதி itself நாங்க clear ஆக சொல்லிட்டோம் - BJP உடன் backdoor politics ஆடுறவர்களோட பேசவே worth இல்லைன்னு. நாங்க எடுத்த முடிவு secular government க்கு மட்டும் தான் support.

    Advertisement

    இப்போ DMK Youth Wing Congress-ஐயும் Rahul Gandhi-யையும் target பண்ணி resolution pass பண்ணுது. ஏன்னா அவர்களோட plan flop ஆயிடுச்சு. Plan என்னனா? BJP ஆசைப்பட்ட மாதிரி Vijay CM ஆகுறதை stop பண்ணணும். ஆனா அது நடக்கல. அதான் இப்போ இவ்வளவு கோஷம், resolution, drama எல்லாம்.

    Cry cry cry 😭

    Tamil Nadu மக்கள் உங்க true colours எல்லாம் பாத்துட்டாங்க.

    IUML leader கூட உங்க dealing expose பண்ணிட்டார்.

    VCK leader கூட expose பண்ணிட்டார்.

    CPM leader கூட உங்க dealing பற்றி openஆ சொல்லிட்டார்.

    எவ்வளவு Congress-ஐ attack பண்ணினாலும் உண்மை மாறாது. மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க" என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Udhayanidhi Stalin slams Congress as ‘backstabbers’ at Anna Arivalayam.. Manickam Tagore issues immediate response