மயிலாப்பூர் வீட்டு 'டிரங்க்' பெட்டியில் நிறைய தங்கம்.. 20 ஆண்டுகள் வேலை செய்த மணிமேகமலைக்கு சபலம்

  • சென்னை: சென்னை மயிலாப்பூரில் ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி வீட்டில் வேலை பார்த்த பெண், 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடியிருக்கிறார். அவரை மயிலாப்பூர் உதவி கமிஷனர் தனசெல்வன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையிலான போலீசார் சிறிது நேரத்திலேயே மந்தைவெளியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். 'டிரங்க்' பெட்டிக்குள் நகைகளும், பணமும் இருந்ததை பல நாட்களாக பார்த்து வந்த வேலைக்கார பெண் சபலத்தில் தூக்கி சென்றார். இதன் காரணமாக தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

    Advertisement

    சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் 2-வது தெருவை சேர்ந்த பத்மாவுக்கு 85 வயது ஆகிறது. இவர் ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி ஆவார், இவரது கணவரும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவார். இவரது மகள் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்தார். இவர் கட்டாய ஓய்வு பெற்றுவிட்டு குடும்பத்துடன் வசிக்கிறார்.

    Advertisement

    இவர்களது வீட்டில் 60 வயதாகும் மணிமேகலை என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் மணிமேகலை வழக்கம் போல வேலைக்காக வந்துள்ளார். அப்போது பத்மா தூங்கிக்கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் பத்மா தூங்கி எழுந்தார். அப்போது வேலைக்கு வந்த மணிமேகலையையை திடீரென காணவில்லை. பட்டப்பகலில் பெட்டியில் இருந்த ரூ.70 லட்சம் நகை- பணம் உள்ள பெட்டியும் காண வில்லை.. அதனை மணிமேகலை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடியது பத்மாவிற்கு தெரிய வந்தது.

    கோவை பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு எப்படி நடந்திருக்கும்? எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விளக்கம்
    Advertisement

    இதுகுறித்து பத்மா உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவல் அறிந்ததும், மயிலாப்பூர் உதவி கமிஷனர் தனசெல்வன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் போலீஸ் படையோடு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நகை-பணம் அடங்கிய 'டிரங்க்' பெட்டியோடு மணிமேகலை, தனது வீடு உள்ள மந்தைவெளி பகுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தார்கள் அவர் வைத்திருந்த நகை-பணமும் மீட்கப்பட்டது. மணிமேகலை மீது கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    இதுகுறித்து மணிமேகலையிடம் போலீசார் விசாரித்தபோது, 'குறிப்பிட்ட 'டிரங்க்' பெட்டிக்குள் நகைகளும், பணமும் இருந்ததை நான் பல நாட்களாக பார்த்துவந்ததால் அதன் மீது ஆசை வந்தது. தினமும் வேலைக்கு வரும்போது, அந்த பெட்டியை ஆசையோடு திறந்து பார்ப்பேன். ஒரு நாள் பேராசையாக மாறி, நகை- பணத்தை கொள்ளையடித்துவிட்டேன்' என்று கூறினார். 20 வருடங்களாக அந்த வீட்டில் வேலை செய்த பெண், ஒரே நாளில் சபலத்தால் திருடியிருக்கிறார்.

    Advertisement
    யார் இந்த ரத்தினம்.. திண்டுக்கல் பிரபல தொழிலதிபர் வீட்டில் அதிகாலையிலேயே ரெய்டு ஏன்.. பின்னணி

    20 ஆண்டுகள் வேலை செய்து கிடைத்த பெயரை , ஒரு நாள் , ஒரு நிமிட சபலத்தால் மணிமேகலை தொலைத்துவிட்டார். பல நாட்களாக தனக்கு வேலை வழங்கிய குடும்பத்தினரை நம்ப வைத்து ஏமாற்ற நினைத்த மணிமேகமலை தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார். வாய்ப்பு கிடைக்கும் வரை தான் இங்கு எல்லாரும் உத்தமர்களாக இருக்கிறார்கள். சந்தர்ப்பம் எவ்வளவு ஆண்டு கழித்து கிடைத்தாலும், அதனை பயன்படுத்தி திருட முயற்சிக்கிறார்கள். பல நாட்களாக இருந்த நம்பிக்கையையும் உடைத்துவிடுகிறார்கள். இனி அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த திருட்டு சம்பவம் அவமானத்தையே தேடி தரும். ஒருவரின் தவறு அவரை தாண்டி அவரது குடும்பத்தினரையும் சேர்த்தே பாதிக்கிறது. மயிலாப்பூரில் ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி வீட்டில் 70 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்த வேலைக்கார பெண் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    A woman who worked at the home of a retired Revenue Department official in Mylapore, Chennai, fled after stealing cash and jewelry worth Rs. 70 lakh. Acting swiftly, a police team led by Mylapore Assistant Commissioner Dhanaselvan and Inspector Ravi apprehended her in Mandaveli shortly thereafter.